இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் (பா.ஜ.க எம்.பி) மீது மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, விசாரணை நடத்தத் தொடங்கினர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் – சஞ்சய் சிங்

அதன்பின்னர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு தற்போது நடந்த தேர்தலில், பெண் ஒருவர் தலைவராக வருவார் என மல்யுத்த வீராங்கனைகள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங் தலைவராக வெற்றிபெற்றது, போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.

சாக்‌ஷி மாலிக் – பஜ்ரங் புனியா

இந்த வேதனையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஒருபக்கம் மல்யுத்தத்திலிருந்து ஓய்வுபெறுவதாகக் கண்ணீருடன் அறிவிக்க, மறுபக்கம் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பித் தருவதாக அறிவித்தார்.

ஆனால், இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே, `இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது எனக்கெதிரான செயல் அல்ல, என்னுடைய கட்சிக்கு (பா.ஜ.க) எதிரான செயல்’ என பிரிஜ் பூஷண் சரண் சிங் அரசியலைப் புகுத்தி பேசிவந்தார்.

இந்த நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங், “மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கின்றனர். அதனால்தான் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மற்ற வீரர், வீராங்கனைகள் யாரும் ஆதரிக்கவில்லை. இப்போது, அவர்களுக்கெதிராகப் போராட வேண்டும்.

பிரிஜ் பூஷண் சரண் சிங்

11 மாதங்களுக்கும் மேலாக இந்திய மல்யுத்தத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. நியாயமான தேர்தல் நடத்தப்பட்டு சஞ்சய் சிங் என்கிற பப்லு பெரும்பான்மையுடன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது கூறுங்கள், மல்யுத்த வீராங்கனைகள் இன்னும் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்… சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகினால் நான் என்ன செய்ய முடியும்… பல மாதங்களாக அவர்கள் எங்களைத் துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர். அதற்கான உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது…” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/qPeigrx