இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவரின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங், நேற்று முன்தினம் WFI-ன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதி வேண்டும் என பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராகப் போராடியவர்களுக்கு இது பெரும் வேதனையைத் தந்தது.

பிரிஜ் பூஷன் சரண் சிங் – சஞ்சய் சிங்

மேலும், இந்த முடிவு வெளியானதும் அதிர்ச்சியில் கண்ணீர் விட்ட ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சாக்‌ஷி மாலிக், `மல்யுத்தத்தைவிட்டே போகிறேன்’ என்று அறிவித்தார். இவரோடு, மற்றொரு ஒலிம்பிக் பதக்க வீரர் பஜ்ரங் புனியா, இந்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பியளிக்கப்போவதாக நேற்று அறிவித்தார்.

சாக்‌ஷி மாலிக்

இதற்கிடையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்த நாட்டில் நீதியை எங்கு பெறுவதென்றே தெரியவில்லை என்றும், தங்களின் மல்யுத்த வாழ்க்கை இருளில் மூழ்கிவிட்டதாகவும் கண்ணீர் சிந்தினார். இவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்திருக்கும் ஒலிம்பிக் பதக்க குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனைக்கே நீதி கிடைக்கவில்லை எனவும், பிரதமர் இதில் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இந்தியாவின் மகள் சாக்‌ஷி மாலிக்குக்காக தன்னுடைய பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக முன்னாள் உலக மல்யுத்த சாம்பியன் விரேந்தர் சிங் அறிவித்திருக்கிறார்.

விரேந்தர் சிங்

இதுகுறித்து விரேந்தர் சிங் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “என்னுடைய சகோதரி, இந்தியாவின் மகள் சாக்‌ஷி மாலிக்குக்காக நானும் என்னுடைய பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கிறேன்.

https://platform.twitter.com/widgets.js

பிரதமர் மோடி அவர்களே, உங்களின் மகளும், என் சகோதரியுமான சாக்‌ஷி மாலிக்கை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் நாட்டின் முன்னணி வீரர்களும் தங்கள் முடிவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு, பாரத ரத்னா விருதாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகியோரை டேக் செய்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/ErYvGMO