தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு  எப்போதுமே மகிழ்ச்சியான தருணத்தில்தான் வருவேன். ஆனால் இன்று சோகமான மன நிலையில் வந்துள்ளேன். தென் மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 16-ம் தேதியே மழை ஆரம்பம் ஆகிவிட்டது.  சென்னையில் சமீபத்தில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தமிழிசை செளந்தரராஜன்

அதை அனுபவமாகக் கொண்டும் தென்மாவட்ட மழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.குஜராத்தில் புயல் மழை வருகிறது என்றவுடன் தாழ்வான பகுதியில் உள்ள ஒரு லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.  ஒடிஷாவில் ’சைனி’ புயல் வந்த போது 10 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உயிரிழப்புகள் இல்லாமல் தடுக்கப்பட்டது. ஒடிஷா மாடல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் என அறிவித்தார்கள். ஆனால்,  இங்குள்ள திராவிட மாடல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும், கனமழை பாதிப்பினை சமாளிக்க முடியாமலும் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது.

மக்களை காப்பாற்றுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.18-ம் தேதி மக்கள் பரிதவித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டும். ஆனால். ’மக்களோடு முதல்வர்’ என கோயம்புத்தூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதற்கு அடுத்த நாளும் வரவில்லை.  கூட்டணிக் கட்சிக்காக டெல்லி சென்று விட்டார். பிரதமரை பார்க்கத்தான் சென்றதாக கூறுகிறார் அப்படி என்றால் கூட்டணி கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லையா?  மழை நீரை சேமிப்பதற்கோ.. பெய்யக்கூடிய மழை நீரை வருங்காலத்திலும் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசு என்ன முயற்சி எடுத்தது.

தமிழிசை செளந்தரராஜன்

மத்திய அரசை குறை கூறுவது விட்டுவிட்டு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை முதல்வர் கூற வேண்டும். மக்கள் இந்த வெள்ளத்தில்  தங்களது வாழ்க்கையை இணைந்து இருக்கக்கூடிய சூழலில் முதலமைச்சர் இந்த மாவட்டத்தில் செலவழித்த நேரம் எவ்வளவு?  முதலமைச்சர் இங்கே, எத்தனை மணி நேரம் செலவழித்தார்? சென்னை கனமழை பாதிப்பின் போது மீட்புப் பணிகள், நிவாரணம் வழங்களில் காட்டிய அக்கறை, வேகத்தை இங்கு காட்டவில்லை.  தென் மாவட்ட  மக்களை மாற்றான் தாய் மனப்பமையுடன்  தமிழக அரசு நடத்துகிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/P7AlKgh