நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நீண்ட நால் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

விஜயகாந்த் – பிரேமலதா பொதுக்குழுக் கூட்டம் 2023

அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தே.மு.தி.க தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த 14-ம் தேதி நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், விஜயகாந்த் முன்னிலையில் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார், பிரேமலதா. பின்னர் விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார்.

அப்போது பேசிய பிரேமலதா, “கேப்டன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்வேன். எந்த நோக்கத்துக்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த லட்சியத்தை நிச்சயம் வெல்வோம். 2024-ல் தே.மு.தி.க எம்.பி-க்கள் டெல்லிக்குச் செல்வது உறுதி. 2026-ல் தே.மு.தி.க ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.

தேமுதிக அறிக்கை

இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து தே.மு.தி.க வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”மருத்துவப் பரிசோதனையில் கேப்டனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சையளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் மருத்துவமனை பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/gbFscY1