ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற தன் தந்தையின் கனவுக்காக உழைப்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார். இது ஆந்திர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த சலசலப்பு அடங்குவதற்குள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து கிரிக்கெட் பிரபலம் ஒருவர் வெளியாகியிருக்கிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு கடந்த மாதம் 28-ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், 9 நாட்கள் முழுமையாகக் கடந்த நிலையில், தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில்,“YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்திருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்குப் பிறகு ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/jiCxkUK
