உத்தரப்பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி ராமரின் சிலை நேற்று முன்தினம் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. 4.5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட அந்த சிலை, வலது கையில் அம்பையும் இடதுகையில் வில்லையும் ஏந்தி நிற்கிறது. சிலையின் தோரணத்தில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நிறுவப்பட்ட முழு உருவச் சிலையின் புகைப்படம் நேற்று முதன்முறையாக வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், சிலையின் புகைப்படம் வெளியானது தொடர்பாக அயோத்தி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடுமையாகச் சாடியிருக்கிறார். “அயோத்தி ராமர் கோயிலில் புதிய சிலை இருக்கும் இடத்தில் பிராண பிரதிஷ்டை செய்யும் சடங்குகள் நடைபெற்று வருகின்றன… சிலையின் உடலை தற்போது ஆடைகளால் மூடியிருக்கிறோம்.
ஆனால், பிரதிஷ்டை செய்வதற்கு முன்பே, ராமர் சிலையில் முழு உருவம் வெளிப்படுத்தப்பட்டது சரியல்ல… சிலையின் முழு உருவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுர்க்கிறது. இதை யார் செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த சிலையின் புகைப்படம் கோயில் தளத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளால் வெளியிடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், ராமர் சிலையின் புகைப்படத்தைக் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இப்போது தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/vwat1b9
