இந்தியாவின் கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக 11 பெண் வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது. உச்ச நீதிமன்றம் நடைமுறைக்கு வந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட நீதிபதி இந்து மல்ஹோத்ரா, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

சந்திரசூட்

அதன்பிறகு, 2013-ல், மீனாட்சி அரோரா, கிரண் சூரி, விபா தத்தா மகிஜா ஆகியோர் மூத்த வழக்கறிஞர்களாகப் பதவியேற்றனர். 2015-ல் வி மோகனா, மகாலட்சுமி பவானி ஆகிய இரண்டு பெண் வழக்கறிஞர்களும், அதைத் தொடர்ந்து, 2006-ல் நீதிபதி சாரதா அகர்வால், 2015-ல் நீதிபதி ரேகா ஷர்மா ஆகிய ஓய்வு பெற்ற இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களாகப் பரிந்துரைக்கப்பட்டனர்.

மேலும், 2019-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரே நேரத்தில் ஆறு பெண் வழக்கறிஞர்களான மாதவி திவான், மேனகா குருசுவாமி, அனிதா ஷெனாய், அபராஜிதா சிங், ஐஸ்வர்யா பதி மற்றும் பிரியா ஹிங்கோராணி ஆகியோருக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை வழங்கியது. இந்த வகையில், தற்போது வரை 12 மூத்த பெண் வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உச்ச நீதிமன்ற

இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில், 34 முதல் தலைமுறை வழக்கறிஞர்கள், 11 பெண்கள் வழக்கறிஞர்கள் உட்பட 56 வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. பெண் மூத்த வழக்கறிஞர்களில் அமித் ஆனந்த் திவாரி, சௌரப் மிஸ்ரா, அபினவ் முகர்ஜி ஆகியோர் முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான ஐஸ்வர்யா பாடி,“உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை உண்மையாகவே பாலின நீதிக்கான சேவையாகும். பெண் வழக்கறிஞர்களுக்கு இன்னும் கூடுதல் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/pH6Wkel