சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞர் அணியின் 2–வது மாநில மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசி இருந்தார். குறிப்பாக, ‘தலை­வர் அவர்­களே… இப்­போது கழ­கத் தலை­வர் ஆகி­விட்­டா­லும் இந்த இளைஞர் அணிக்கு எப்­பொ­ழு­துமே நீங்­கள் தான் செய­லா­ளர். நான் பேருக்­குத்­தான் செய­லா­ளர். நிரந்­த­ர­மாக எப்­பொ­ழு­துமே நீங்கள்­தான் செய­லா­ளர். இளைஞர் அணி உங்­க­ளு­டைய குழந்தை. இதற்கு தாய் தந்தை என எல்­லாமே நீங்­கள்­தான்.

சேலம் – இளைஞரணி மாநாடு

இப்­போது இந்த குழந்­தை­கள் எல்­லாம் வளர்ந்து விட்­டார்­கள். அந்த குழந்­தை­க­ளுக்கு நிறைய பொறுப்பு கொடுங்­கள், நிறைய வேலை கொடுங்­கள். வர இருக்­கின்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தகு­தி­யான வேட்­பா­ளர்­க­ளுக்கு, தகு­தி­யான இளை­ஞர்­க­ளுக்கு போட்­டி­யி­டு­கின்ற அந்த வாய்ப்­பைக் கொடுங்­கள். கண்­டிப்­பாக எங்­க­ளு­டைய இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் உழைத்து அந்த வெற்­றியை உங்­க­ளு­டைய கால­டி­யில் சமர்ப்­பிப்­போம்.” என்று பேசி, இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு மேடையிலேயே சீட் கேட்டு அடித்தளம் போட்டு இருக்கிறார் உதயநிதி.

இது இளைஞர் அணி மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ‘ஏற்கனவே இளைஞர் அணி நிர்வாகிகளுக்குதான் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் சீட் வேறு கேட்கிறார்கள்’ என்று சீனியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக தி.மு.க சீனியர் நிர்வாகிகளிடம் பேசும்போது, “திமுகவில் இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, மகளிர் அணி என 23 சார்பு அணிகள் இருக்கின்றன. கலைஞர் கருணாநிதி இருக்கும்போதே, இளைஞர் அணிக்குதான் அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அதற்கு செயலாளராக இருந்தபோது, கூட்டம் கூட்டமாக அந்த அணியில் நிர்வாகியாகதான் மாநிலம் முழுவதும் கட்சிக்காரர்கள் முண்டியடித்தனர். தற்போது உதயநிதி இளைஞர் அணிக்கு செயலாளராக வந்தபோதும், அதே நிலைமைதான். இளைஞர் அணியில் இருந்தால்தான் அரசியல் ரீதியாக உடனே மேலே வந்து விடலாமென்று ஆசையில், முதலில் இளைஞர் அணியில் போஸ்டிங் கேட்பார்கள். அது கிடைக்கவில்லையென்றால்தான், அடுத்தடுத்த அணியை பற்றி யோசிப்பார்கள்.

அமைச்சர் உதயநிதி

உதயநிதி பங்கேற்கும் வகையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில்கூட, ‘இளைஞர் அணி நிர்வாகி’களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. உதயநிதியை சந்திக்க அமைச்சர் அலுவலகத்துக்கோ, முகாம் அலுவலகத்துக்கோ செல்லும் சீனியர்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இதில் சீனியர்கள் மத்தியில் லேசான சலசலப்பு, முணுமுணுப்பு இருக்கிறது.

அறிவாலயத்தை தாண்டி அன்பகத்திலுன் பல அரசியல் நகர்வுகள் முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டில், மேடையிலேயே இதை உதயநிதி தெளிவுப்படுத்திவிட்டார். இளைஞர்களுக்கு சீட் தாருங்கள் என்று பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். இதுதான் கட்சிக்குள் சீனியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று 20 தி.மு.க எம்.பி.க்கள் இருக்கினறனர். இவர்களில் திருநெல்வேலி எம்.பி ஞான திரவியம், கடலூர் எம்.பி ரமேஷ் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் உள்பட ஒருசிலரை கழற்றிவிட்டுவிட்டு, மீதமுள்ளவர்களை மீண்டும் நிறுத்தும் நோக்கில் வரைவு பட்டியலை தலைமை தயாரித்து வருகிறது. ஆனால், உதயநிதியின் இந்த கோரிக்கையால், தலைமையின் முடிவில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அன்பகம்

ஏனென்றால், தற்போதுள்ள 20 எம்.பிக்களில் ஒருவர் 80 வயதை கடந்துவிட்டார். மூன்றுபேர் 70 வயதை கடந்தவர்கள். 3 பேர் 60 வயதை கடந்தவர்கள் என கிட்டதட்ட எல்லாருமே 50 வயதை கடந்துவிட்டார்கள். உதயநிதியின் கோரிக்கையால், 50 வயதை கடந்த ஒருசிலருக்கு சீட் கிடைக்கமால் போக வாய்ப்பு இருக்கிறது. எங்கு நம் தலை உருளுமோ என்று பதற்றத்தில்தான் இந்த சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், இளைஞர் அணியினரை உற்சாகப்படுத்ததான் உதயநிதி இப்படி பேசியிருக்கிறார் என்று நம்புகிறோம். நாடாளுமன்றத்துக்கு அனுபவமிக்க, கட்சிக்கு நீண்டநாள்கள் உழைத்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுதான் வழக்கமான நடவடிக்கையாக இருக்கிறது. இதில் தலைமை மாற்றம் செய்து சலசலப்பை அதிருப்தியாக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. முடிவு தலைமையின் கையில்தான் இருக்கிறது.” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/WEuek0s