நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் வியூகங்கள் வகுத்துத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் பல முக்கிய தலைவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்திருப்பது, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி மாறிய தலைவர்களில் சஞ்சீவ் கஜூரியாவும் ஒருவர். இவர், தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவரும், கதுவா மாவட்டத் தலைவருமாவார். இவருடன் கட்சியின் பல உறுப்பினர்களும், பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். சஞ்சீவ் கஜூரியா, நரேந்திர மோடி அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பாராட்டினார். மேலும், உலக அரங்கில் இந்தியாவின் நிலை குறித்தும் பிரதமரின் தலைமையைப் பாராட்டினார்.

பா.ஜ.க-வின் ஜம்மு காஷ்மீர் பிரிவு தலைவர் ரவீந்தர் ரெய்னா முன்னிலையில், ஜம்முவில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில், தேசிய மாநாடு கட்சியிலிருந்து விலகிய அனைவரும், பா.ஜ.க-வில் இணைந்தனர்.
கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்ற ரெய்னா, “மதமோ பிராந்தியமோ பாராமல் மக்களின் நலனுக்காக பா.ஜ.க செய்து வரும் அர்ப்பணிப்பு என்பது மிகப்பெரியது. மோடி அரசின்மீது நம்பிக்கை வைத்து, பா.ஜ.க-வை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரின் நலனுக்காகவும் பா.ஜ.க உழைத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின், மக்கள் நலன் சார்ந்த பணிகளைத் தடுக்கவே… எதிர்க்கட்சிகள் `இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.
பிரதமர் மோடியின் புகழ் அதிகரித்து வருவதால், அவர்களின் தவறான கூட்டணி இப்போது தோல்வியடைந்துள்ளது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் பா.ஜ.க-வின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் வரலாற்று சிறப்புமிக்கவவை” என்றார்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 5 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகளில், ஜம்மு காஷ்மீர் மாநாட்டு கட்சி 3 தொகுதிகளிலும், பா.ஜ.க 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் ஃபரூக் அப்துல்லா கட்சியிலிருந்து பல நிர்வாகிகள், பா.ஜ.க-வுக்குத் தாவியிருப்பது, அவரது கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/WpzsXlm
