சமீபத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்ட அதே உத்தரப்பிரதேச மாநிலத்தில், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. இந்த மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு இஸ்லாமிய மன்னர்கள் மசூதி கட்டியதாக இந்து அமைப்பினர் கூறிவருகின்றனர். அதைத்தொடர்ந்து, மசூதி சுவரில் இருப்பதாகக் கூறப்படும் அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி இந்துப் பெண்கள் ஐந்து பேர் வழக்கு தொடர்ந்ததையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஞானவாபி மசூதி – காசி கோயில்

இதற்கிடையில், மசூதி நிர்வாகம் தரப்பில் தாக்கல்செய்த மனுக்களையெல்லாம் தள்ளுபடி செய்த நீதிமன்றம், மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதியளித்தது. அதையடுத்து, சமீபத்தில் வெளியிடப்பட்ட தொல்லியல் துறை ஆய்வு முடிவில், ஞானவாபி மசூதி வளாகத்தில் முன்பு ஒரு இந்து கோயில் இருந்ததாகவும். ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் 1676 முதல் 1677-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக அரபு பாரசீக மொழியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில், மசூதி வளாகத்தில் உள்ள ‘வியாஸ் கா தெகானா’ பகுதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியில் இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்யலாம், அடுத்த ஏழு நாள்களுக்குள் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யலாம் என்றும் வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில், வாரணாசி நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாக AIMIM கட்சியின் தலைவரும், எம்.பி-யுமானஊர்வசி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஒவைசி, “இந்த உத்தரவை தான் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி நாளில் நீதிபதி பிறப்பித்திருக்கிறார். 1993-க்குப் பிறகு 30 ஆண்டுகளாக அங்கு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை அவரே கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, உள்ளே சிலை இருக்கிறது என்று அவருக்கு எப்படித் தெரியும். எனவே, இது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாகும்.

ஒவைசி

சீல் வைக்கப்பட்ட பகுதியை ஏழு நாள்களுக்குள் திறக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதேசமயம், மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். இது ஒரு தவறான முடிவு. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தாங்கள் நிற்பதாக மோடி அரசு கூறாத வரை இத்தகைய போக்கு தொடரும். பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பின் போதும், நான் இதே அச்சத்தை எழுப்பினேன்” என்று கூறினார். மேலும், “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்ட, பிறகு கீழ் நீதிமன்றங்கள் ஏன் உத்தரவைப் பின்பற்றவில்லை?” என்றும் ஒவைசி கேள்வியெழுப்பினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்ட ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஞானவாபி மசூதி மற்றும் மதுரா மசூதி தொடர்பாக இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீது நீதிமன்றத்தில் அடுத்தடுத்து விசாரணை வருவது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/ARrHW5X