மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நாராயண் ராணே உட்பட 6 பேரின் ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்காலம் விரைவிலே முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அப்பதவிகளுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற முடியும். ஒருவர் வெற்றி பெறவேண்டுமானால் 42 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 42 உறுப்பினர்களும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 44 உறுப்பினர்களும் இருக்கின்றனர். பா.ஜ.க.வில் 116 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா சார்பாக சமீபத்தில் கட்சியில் சேர்ந்த மிலிந்த் தேவ்ரா வேட்பாளராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பாக ஒரு இடத்தில் வெற்றி பெற முடியும். 6வது உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும். எனவே ரகுராம் ராஜன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்து இது தொடர்பாக பேசினார். ரகுராம் ராஜனுக்கு உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடன் சென்று வரவேற்பு கொடுத்தார்.
ரகுராம் ராஜனை வேட்பாளராக அறிவிப்பது குறித்து காங்கிரஸ் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த முறை சட்டமேலவை தேர்தலின் போதுதான் சிவசேனா உறுப்பினர்கள் வாக்களித்துவிட்டு இரவோடு இரவாக குஜராத்திற்கு புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு அவர்கள் அஸ்ஸாம் சென்றனர். அதனை தொடர்ந்து சிவசேனா இரண்டாக உடைந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/v57zESD
