அயோத்தியில் 500 ஆண்டுகளாக இருந்த பாபர் மசூதி, 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கலவரக்காரர்களால் இடிப்புக்குள்ளானது. அங்கு ஏற்கெனவே இருந்த இந்து கோயிலை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அங்குதான் ராமாயண கதாபாத்திரமான ராமர் பிறந்தார் என இந்து அமைப்புகள் தீவிரமாகக் கூற, வழக்கு தொடுத்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு அந்தப் பகுதியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி 22-ம் தேதி பிராண பிரதிஷ்டையும் நடைபெற்று முடிந்தது. இது முடிந்து சில நாள்களே ஆகும் நிலையில், தற்போது ஞானவாபி, மதுரா மசூதிகள் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஞானவாபி

இதில், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துதான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும், மதுரா கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும் சில அமைப்புகள் வாதிடுகின்றனர். கடந்த வாரம், ஞானவாபி வழக்கில் கூட மசூதிக்குள் இருக்கும் குறிப்பிட்ட பகுதியில் இந்துக்கள் சென்று வழிபடலாம் என்று வாரணாசி நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த நிலையில், ஞானவாபியும், மதுராவும் அமைதியான முறையில் திரும்பக் கிடைத்துவிட்டால் அனைத்தையும் மறந்துவிடுவதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகராஜ் என்று தெரிவித்திருக்கிறார்.

கோவிந்த் தேவ் கிரி மகராஜ்

புனேவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கோவிந்த் தேவ் கிரி மகராஜ், “மூன்று கோயில்களும் (அயோத்தி, ஞானவாபி, மதுரா) திரும்பக் கிடைத்துவிட்டால், மற்ற கோயில்களை நாங்கள் பார்க்கமாட்டோம். ஏனெனில், நாம் எதிர்காலத்தில் வாழவேண்டுமே தவிர கடந்த காலத்தில் அல்ல. நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும். எனவே, இந்த மூன்று கோயில்களும் அமைதியான முறையில் திரும்பக் கிடைத்துவிட்டால், மற்ற அனைத்தையும் நாங்கள் மறந்து விடுவோம். இந்த மூன்றும் ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள். மக்கள் வலியில் இருக்கின்றனர். அவர்கள் (இஸ்லாமியர்கள்) நினைத்தால் அந்த வலியைக் குணப்படுத்த முடியும். மேலும், இது அமைதியான முறையில் சகோதரத்துவத்தை அதிகரிக்க உதவும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/GficMeb