புனேவின், ஆலண்டியில் கீதா பக்தி அமிர்த மஹோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “அயோத்தி கோயிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது ஒரு தைரியமான செயல்.

அயோத்தி ராமர் கோயில்

ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ராமர் மீண்டும் அயோத்திக்கு வந்திருக்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு, நடந்த இந்த நிகழ்வு ஒரு தைரியமான செயல். தற்போதைய தலைமுறையினருக்கு ராம் லல்லாவை அவரது இடத்தில் காணும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. இது நடப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைத்தோம். அதுமட்டுமல்லாமல், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், விருப்பத்தாலும்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. பாரதம் தனது கடமைக்காகத் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்ல வேண்டும்.

அது `சமர்த்’ (திறன்) ஆகவில்லை என்றால், எழவில்லை என்றால் உலகம் மிக விரைவில் அழிவைச் சந்திக்க நேரிடும். உலகத்திற்குத் தேவையான பாரதவர்ஷம் தொடர்ந்து உயர வேண்டும். எக்காரணம் கொண்டும் பாரதம் வளர்ச்சியடையாமல் இருக்கக் கூடாது. அப்படி நடந்தால், உலகம் விரைவில் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதை உலக அறிவுஜீவிகள் அறிவார்கள். இதைப் பற்றி எழுதவும் செய்கிறார்கள். எனவே, பாரதம் தனது கடமையை நிறைவேற்ற உயர வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/jFvzymi