“இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த நீதிஷ் குமாரே பா.ஜ.க பக்கம் போனது பெரும் பின்னடைவுதானே?”

“இந்தியா கூட்டணியில் ஒரு தொய்வு இருப்பது உண்மைதான். ஆனால் நீதிஷ் குமார் வெளியேறியதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. மக்கள் மத்தியில் அவர் நம்பத் தகுந்த நபரே கிடையாது. அவர் இப்போது அம்பலப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். எந்த காரணத்துக்காக அணி மாறினார் என்ற காரணத்தை அவர் சொல்ல முடியவில்லை. தொகுதி பங்கீட்டுக்கு தாமதமாகிறது என்பதெல்லாம் ஒரு காரணமா?

எங்கள் மாநாட்டுக்கு தேசிய தலைவர்களை அனுப்பாததில் எங்களுக்கு காங்கிரஸ்மீது வருத்தம்தான்.. அதற்காக கூட்டணியே வேண்டாம் என போயிவிடுவோமா..? எனவே கொள்கை பிடிப்பில்லாத சந்தர்பவாதி நீதிஷ் குமார் போனதால் எந்த பின்னடைவும் இல்லை”

நிதிஷ் குமார்

“மேற்கு வங்கத்தில் தனித்துத்தான் போட்டி என அறிவித்துவிட்டார் மம்தா… இதற்கென்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?”

“கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸும் ஓரணியில் திரள முடியாது. அதேபோல்தான் சில நடைமுறை சிக்கல்கள் சில மாநிலங்களில் இருக்கின்றன. பா.ஜ.க-வை ஒரு கட்சி தனித்தே தோற்கடிக்க முடியும் என்றால் அங்கே தனித்துகூட போட்டியிடட்டும். பா.ஜ.க வலுவாக இருக்கிறபோது அங்கே ஓரணியில் திரண்டு பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும்.

அந்த வகையில் ஓரணியில் திரள வேண்டிய அவசியமுள்ள உத்திரபிரதேசத்தில் காங்கிரஸும் சமாஜ்வாடியும் சேர்ந்துவிட்டார்களே. சண்டிகரில் ஆம் அத்மியும் காங்கிரஸ் ஒன்றாகத்தான் நிற்கிறார்கள். எனவே பா.ஜ.க-வை உறுதியாக வீழ்த்துவோம்!”

மம்தா பானர்ஜி

“நாங்கள்தான் இஸ்லாமியர்களின் பாதுகாவலர் என்கிறது அ.தி.மு.க?”

“இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்த சட்டத்தை கொண்டு வர துணை புரிந்தாரே அந்த பாதுகாவலை சொல்கிறீர்களா? பாசிக பா.ஜ.க-வின் எந்த நடவடிக்கைகளை எதிர்க்காமல் மெளனமாய் நிற்கிறாரே அதனை சொல்கிறீர்களா?”

எடப்பாடி பழனிசாமி

“ராமர் கோவில் விவகாரத்தில் கோவில் கட்டினால் வாக்குகள் வராது என பா.ஜ.க-வுக்கு எதிராக பேசியுள்ளாரே எடப்பாடி?”

“பாபர் மசூதியை இடித்துவிட்டு கட்டியதால் எங்களுக்கு உடன்பாடில்லை என்றார் உதயநிதி. இது தி.மு.க-வின் கொள்கை நிலைப்பாடு. எடப்பாடி அப்படியேதும் சொன்னாரா. கால்வலி, அதனால் போகவில்லை என்றார். இதெல்லாம் ஒரு கொள்கை நிலைப்பாடா? சரி பா.ஜ.க-வை எதிர்க்காமல் இருக்க காரணங்கள் இருக்கலாம். ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்க்காமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார் எடப்பாடி. ஆளுநரையே எதிர்க்க அஞ்சும் அ.தி.மு.க பா.ஜ.க-வை எதிர்த்து செயல்படுகிறதா?”

“நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாம் அணி அமைவதால் ஏதேனும் தாக்கம் இருக்குமா?

அண்ணாமலை

“மூன்றாம் அணி எல்லா தேர்தலில்களும் இருக்கும். ஏதோ இப்போதுதான் முதன்முறை தோற்றியதுபோல் பேசக் கூடாது. இம்முறை தோன்றும் அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அ.தி.மு.க தனியாக இருக்கிறது. பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் போய் சேருவார்கள். தி.மு.க கூட்டணிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. தி.மு.க கூட்டணி வலிமையாக நிற்கிறது. 40 தொகுதிகளிலும் வெல்வோம்”

“தி.மு.க கூட்டணியில் 3-க்கும் அதிகமான எம்.பி தொகுதிகள் வரை கேட்பதாக தகவல் கசிக்கிறதே… தி.மு.க சின்னத்தில் போட்டியீடுவீர்களா?”

ஸ்டாலின்

“கட்டாயம் கேட்கத்தான் செய்வோம். அது எங்கள் உரிமைதானே. தி.மு.க கூட்டணியில் 6 எம்.எல்.ஏ தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்ற ஒரே கட்சி வி.சி.க-தான். 2 பொதுத் தொகுதிகளை வென்றுள்ளோம். அதுவும் தனிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றோம். இப்போது கூடுதலாக ஆண்ட கட்சிக்கு இணையாக ஆளும் கட்சிக்கு இணையாக மாநாடு நடத்தி எங்கள பலத்தை நிரூபித்துள்ளோம். கிளை கட்டமைப்பும் வலுவாக இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக தி.மு.க-விடம் எத்தணை தொகுதிகள் கேட்போம் என்பதை எங்கள் தலைவர் முடிவெடுப்பார். மேலும் போட்டியிடுவது தனிச்சின்னத்தில்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/NEbuRax