கழுகார் அப்டேட்ஸ்: ‘எச்சரித்த கனிமொழி… தெறித்து ஓடும் அமைச்சர்கள்..!’

தி.மு.க நிறுவனர் பெயர்கொண்ட அந்த எம்.எல்.ஏ-வின் ஆடியோ ஒன்று வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக மணல் அள்ளிக் கைதான தன் ஆதரவாளரை விடுவிக்கச் சொல்லி டி.எஸ்.பி-யை அவர் மிரட்டும் ஆடியோதான் அது.
‘தலைமையே நேரடியாக விசாரணையில் இறங்கினால், அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிபோக வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் உள்ளூர் தி.மு.க சீனியர்கள்.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்…
* எச்சரித்த கனிமொழி!
* தெறித்து ஓடும் அமைச்சர்கள்!
* மா.செ கூட்டத்தில் எச்சரித்த எடப்பாடி!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
செந்தில் பாலாஜி: காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி!

அமலாக்கத்துறை நேற்று முன்தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தி, அவரை கைது செய்தது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட கஸ்டடியை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்கு உடன் அப்டேட் செய்யப்படுகிறது.
“இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!” – பாஜக-வை எச்சரித்த ஸ்டாலின்!

தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணையை, பா.ஜ.கவின் பழிவாங்கல் நடவடிக்கை என திமுக தரப்பிலிருந்து விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு பா.ஜ.க-வை விமர்சித்து, எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் வீடியோ பேச்சை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
———————-
“அந்த அமைச்சர் ஒரு குட்டி செந்தில் பாலாஜி..!” – அண்ணாமலை சொல்வது யாரை?
‘பிரிஜ் பூஷண் மீதான ‘போக்சோ’ வழக்கு ரத்து!’ – டெல்லி போலீஸ் முடிவு

இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிரிஷ் பூஷண் சரண் சிங்மீது டெல்லி காவல்துறை போக்சோ உள்ளிட்ட சில வழக்குகளைப் பதிவு செய்தது.
ஆனால், அவர் கைதுசெய்யப்படவில்லை.
இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
பொறியியல் படித்துவிட்டு மருத்துவ படிப்பு… ஐ.ஐ.டி-க்களில் சட்டம்!

எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவோடு இருக்கும் மாணவர்கள் அந்தப் படிப்பு கிடைக்காவிட்டால் மனமொடிந்துபோகிறார்கள்.
எம்.பி.பி.எஸ் கிடைக்காவிட்டால் என்ன? பொறியியல் படித்துவிட்டுக்கூட மருத்துவர்களோடு இணைந்து மருத்துவப் படிப்பைப் படிக்கலாம்.
“இப்படி சில படிப்புகள் இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது” என்று கூறும் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்,
டாக்டர்களும் இன்ஜினீயர்களும் ஒரே வகுப்பில் படிக்கும் படிப்புகள் என்னென்ன..?
அவற்றை சொல்லிக்கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் எங்கெங்கு உள்ளன..?
இதேபோல, பி.இ, பி.டெக்., எம்.பி.பி.எஸ், இளநிலை சயின்ஸ், ஃபார்மஸி படித்த மாணவர்கள் LLB – Intellectual Property Law என்ற சட்டப்படிப்பை எங்கு படிக்கலாம்..?
இன்னும் நம் கண்முன்னே இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன…என்பது குறித்தெல்லாம் இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் ‘கற்பது உலகளவு’ தொடரில் விரிவாக விளக்குகிறார்…
—————
மருத்துவப் படிப்பில் அடுத்த அணுகுண்டு: மத்திய அரசின் பொதுக் கலந்தாய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு- ஏன்?
‘ஓட்ஸ்’ ஆரோக்கியமான உணவா?

“ஓட்ஸ் சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது…. அதில் உண்மையிலேயே சத்துகள் உள்ளனவா…. ஓட்ஸை எப்படிச் சாப்பிடுவது சிறந்தது?”
– வாசகரின் கேள்விக்கு ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
மக்கள் என் பக்கம்: டென்ட்கொட்டாய் டைரீஸ்

1987-ல் வெளிவந்த ‘மக்கள் என் பக்கம்’, ஒரு மலையாளப் படத்தின் ரீமேக். ‘ராஜாவின்டே மகன்’ என்கிற அந்த மலையாளப் படம்தான் மோகன்லாலை சூப்பர் ஸ்டாராக்கியது. தமிழில் சத்யராஜ் நடித்தார். ஒரு கடத்தல்காரனுக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் இந்தப் படத்தின் மையம்.
சிட்னி ஷெல்டன் எழுதிய ‘Rage of Angels’ என்கிற நாவலையொட்டி அமைந்த இந்தக் கதையில், இருவருக்கும் இடையில் நடக்கும் மோதலில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கிற பெண் வழக்கறிஞராக அம்பிகா நடித்திருந்தார்.
படம் குறித்த மேலும் சுவாரஸ்ய தகவல்களுடன் கூடிய விரிவான கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…
from Tamilnadu News https://ift.tt/h3zX9EK
