தமிழ்நாட்டின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலியின் காரணமாக சிகிச்சையில் இருக்கும் அவருக்கு, விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, செந்தில் பாலாஜி வகித்து வரும் துறைகளை இருவேறு அமைச்சர்களுக்கு வழங்குவதென தமிழக அரசால் முடிவுசெய்யப்பட்டது.

ஸ்டாலின், ஆளுநர் ரவி

இதற்கான பரிந்துரைக் கடிதம் தமிழக அரசால் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்தப் பரிந்துரையை நிராகரித்து, தமிழக அரசுக்குக் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆளுநர் ரவிக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இருவேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

திருமாவளவன்

ஆனால் ஆளுநர் அதை திருப்பியனுப்பியிருக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார்… அவர்களுக்கு என்னென்ன துறைகள் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ் பவன் ஆளுநர் மாளிகையா… ஆர்.எஸ்.எஸ் அலுவலகமா என்கிற ஐயம் எழுகிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/5ENfRlF