மத்தியில் ஆளும் பா.ஜ.க தொடர்ச்சியாக 9 ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்து 10-வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாகக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த நாட்டுக்கு பா.ஜ.க செய்தவற்றைச் சாதனை விளக்கக் கூட்டம் என்ற பெயரில் பா.ஜ.க தலைவர்கள் கூட்டம் நடத்திவருகின்றனர்.

பா.ஜ.க – காங்கிரஸ்

இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்கரி, மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஒருமுறை தன்னை காங்கிரஸில் சேருமாறு கூறியதையும், அதற்கு காங்கிரஸில் சேர்வதற்குப் பதில் கிணற்றில் குதிப்பேன் என்று தான் பதிலளித்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

முன்னதாக, மகாராஷ்டிராவின் பண்டாராவில், பா.ஜ.க-வின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி நிறுவடைந்ததை முன்னிட்டு நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய நிதின் கட்கரி, “ஸ்ரீகாந்த் ஜிச்கர் (மறைந்த காங்கிரஸ் தலைவர்) என்னிடம் `நீங்கள் ஒரு நல்ல கட்சித் தொண்டர், தலைவரும் கூட. காங்கிரஸில் நீங்கள் சேர்ந்தால் உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்’ என்று கூறினார்.

நிதின் கட்கரி

ஆனால் நான், `காங்கிரஸில் சேர்வதற்குப் பதில் கிணற்றில் குதிப்பேன். ஏனெனில் எனக்கு பா.ஜ.க மீது வலுவான நம்பிக்கை இருக்கிறது. அதன் சித்தாந்தத்துக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்’ என அவரிடம் கூறிவிட்டேன். இப்போது இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கான பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் நாட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/w7cCPXs