பாஜக ஆதரவாளராக அறியப்படுபவர் உமா கார்கி. இவர் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வந்தார். பெரியார், கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில், அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து படிக்க சொல்லியிருந்தார்.
இதுகுறித்தும் உமா தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக விஜய் ரசிகர்கள் சென்னை போலீஸில் புகாரளித்திருந்தனர். அதேபோல தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்தும் விமர்சித்தது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்துகிறார் என்று கோவை திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்திருந்தனர்.

இதையடுத்து உமா கார்கியை போலீஸ் இன்று காலை கைது செய்துள்ளனர்.
உமாவின் சமூக ஊடக செயல்பாட்டை பாராட்டி, நேற்று தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது வழங்கியிருந்தார். உமா கார்கி கைது செய்யப்பட்டிருப்பதை பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு வழக்கில் உமா நாளை சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவதாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
from Tamilnadu News https://ift.tt/gISzvmZ
