`பெண் சுதந்திரம்’ என என்னதான் பேசிக்கொண்டாலும், இன்றளவும் இரவு நேரங்களில் பெண்கள் தயக்கத்தோடு, பயத்தோடுதான் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், இரவில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறை புதிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காவல்துறையின் பெண்கள் பாதுகாப்புத் திட்டத்தில், இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை தனியாகப் பயணிப்பதில் பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், தமிழக அரசு கொடுத்துள்ள உதவி எண்களைத் தொடர்பு கொண்டால் போதும், அப்பெண்களை, காவல்துறையின் ரோந்து வாகனத்திலேயே இருக்கும் இடத்தில் இருந்து அழைத்துச் செல்லும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து நாள்களிலும் இலவசமாக இந்தச் சேவை வழங்கப்பட உள்ளது. உதவி தேவைப்படும் பெண்கள் 1091, 112, 044- 2345 2365 மற்றும் 044- 2844 7701 ஆகிய எண்களில் அழைத்து இச்சேவையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் பெண்கள் பாதுகாப்பு குறித்த இந்தப் புதிய திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
from Tamilnadu News https://ift.tt/qHTLmgb
