பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மே 3-ம் தேதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர் முன்னெடுத்த போராட்டமானது இரு சமூகத்தினரிடையே பெரும் கலவரமாக வெடித்துப் பல உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது.

மணிப்பூர்

கர்நாடகத் தேர்தலுக்கு முன்பாக ஆரம்பித்த இந்த கலவரம் ஒன்றரை மாதத்துக்கு மேலாக நீடிக்கும் நிலையிலும், `கர்நாடக தேர்தலில் எவ்வளவு பிஸியாக செயல்பட்டாரோ, இன்னும் அதே அளவுக்கு எதிர்க்கட்சிகளைச் சாடுவதிலும், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலும் தான் மோடி பிஸியாக இருக்கிறார், இதுவரை மணிப்பூர் கலவரம் பற்றி வாய்திறக்கவேயில்லை’ என எதிர்க்கட்சிகள் சாடிவருகின்றனர்.

இடையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக, `பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் அரசால் வன்முறையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. முதலமைச்சர் தான் கரணம். பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும்’ என்று வலியுறுத்தி மோடிக்கு கடிதம் அனுப்பினார். அதோடு, மணிப்பூர் மக்களுமே பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மன் கி பாத்தை புறக்கணித்து ரேடியோக்களை உடைக்கும் வீடியோக்கள் வெளியாகின.

பாஜக – மோடி

இப்போதைக்கு மத்திய அரசு, துணை ராணுவ படையினரை அனுப்பி கலவரத்தை தடுக்க முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஒன்பது பேர் ஐந்து முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக

அந்தக் கடிதத்தில், “மாநில அரசின் நிர்வாகத்தின் மீது மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே அரசு நிர்வாகத்தின் சில சிறப்பு நடவடிக்கைகளை சட்டத்தின்படி மேற்கொண்டால் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கலாம். மைதேயி சமூக எம்.எல்.ஏக்களுக்கும், குக்கி சமூக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். மணிப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய ராணுவ படைகளை ஒரே சீராக நிலைநிறுத்த வேண்டும். மாநிலத்தின் ஒருமைப்பாட்டை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது” என்று எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

from Tamilnadu News https://ift.tt/vEhMwVD