அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று (21/06/2023) அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற கொறடா எஸ்.பி வேலுமணி பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசியபோது, “இரண்டு ஆண்டுகளாக எதுவுமே செய்யாத ஆட்சி என்றால், அது மு.க ஸ்டாலினின் ஆட்சிதான். இந்தியாவிலேயே நம்பர் 1 சி.எம் என்று அவர்களே கூறிக் கொள்கிறார்கள். ஸ்டாலின் டாஸ்மாக்கில் தான் நம்பர் 1. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்தே அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. அதை பழிவாங்கல் என்கிறார்கள். நீ தப்பு செஞ்சியா இல்லையா..? பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கினீர்களா இல்லையா?
அரசுக்குகு வரி கட்டாமல், மது ஆலைகளில் இருந்து நேரடியாக மது டாஸ்மாக்கில் விற்கப்படுகிறது. அரசிற்கு சொந்தமான 5500 பார்களில், 3500க்கும் மேற்பட்ட பார்கள் வழக்கு இருப்பதாக கூறி முறைகேடாக செயல்பட்டு வருகிறது. எல்லா துறையிலும் லஞ்சம். கனிமொழி கைதான போது, அவரைப் பார்க்க கூட போகவில்லை.. ஆனால் செந்தில் பாலாஜியை பார்க்க குடும்பமா போறீங்க. 2 நாள்களுக்கு முன்னால் கிடைத்த தகவல்… போலீஸ் இன்டெலிஜென்ட் மற்றும் சில உயர் அதிகாரிகள் ரிப்போர்ட் ஒன்றை முதல்வரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

திமுக அரசுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை சரி செய்ய, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி நேற்று கூட எடப்பாடியார் என்னிடம் பேசினார். எங்களை கைது செய்து விட்டால், மக்கள் எல்லாத்தையும் மறந்துவிடுவாங்களா? மக்கள் ஏமாளிகள் இல்லை. எங்களை கைது செய்தாலும் ‘ஐயோ அம்மா’ என்றெல்லாம் குதிக்க மாட்டோம். உங்கள் (மு.க.ஸ்டாலின்) குடும்பம் தான் முதல்வர்… நீங்கள் டம்மி. கல்யாண மண்டபத்தில் குவாட்டர் அடிக்கிறது, விளையாட்டு மைதானத்தில் குவாட்டர் அடிக்கிறது, 12 மணி நேரம் வேலை பார்ப்பது.. இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்றார் காட்டமாக.
from Tamilnadu News https://ift.tt/nC0XAcQ
