தி.மு.க அரசைக் கண்டித்து மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதுரை ஆர்பாட்டாத்தில்

ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பாட்டில் விற்பனையாகிறது. பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்து இரண்டு வருடத்தில் 7,200 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

ஆர்பாட்டம்

இது குறித்துக் கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது, ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?

அதேபோல் தமிழகத்தில் 5,000 பார்கள் இருக்கின்றன, இதில் 3,000 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குகின்றன. மேலும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்களின் சாராய ஆலையின் மூலம் கலால் வரி கட்டாமல் டாஸ்மாக்குக்குச் செல்வதால் 3,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது மூன்று அடைப்பு இல்ல, 30 அடைப்புகள்கூட வந்துவிடும்.

கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களை, விஷச்சாராயம் அருந்தியவர்கள் என்று தமிழக டி.ஜி.பி-யே கூறுகிறார்.

சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் ஸ்டாலின் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்றுவிட்டார். இதனால் சென்னை தலைமைச் செயலகமே காலியாகிவிட்டது. சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயர், மதுரையில் கலைஞர் நூலகம், இப்படியே சென்றால் தமிழ்நாட்டின் பெயரைக்கூட கருணாநிதி நாடு என மாற்றுவார்கள்.

ஆர்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார்

தமிழ்நாட்டு மக்கள் ஸ்டாலின் மீது கோபமாக இருக்கிறார்கள், அதனால்தான் குடியரசுத் தலைவர் சென்னை கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வரவில்லை. அதுபோல் பீகார் முதல்வரும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு வரவில்லை. 

எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் சீனப் பிரதமர், பாரதப் பிரதமர் இருவரும் மாமல்லபுரத்தில் விழா நடத்தினர். மேலும், நம் பிரதமரை வைத்து மரக்கன்று நடுவிழாவையும் பெண்களுக்கு இரு சக்கர வாகன திட்டத்தையும் தொடங்கிவைத்தார் எடப்பாடியார். அதேபோல் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரை வைத்து பல திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார். இன்றைக்கு ஜனாதிபதி முதல் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூட விழாவுக்கு வராமல் இருப்பதால் தமிழகத்துக்குத் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முழுக் காரணம் முதலமைச்சர்தான்.

ஆர்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார்

செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் முதல்வர் வீட்டுக்குப் போய்விடுவார். செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து அடுத்தடுத்து ரெய்டுகள் வரும், அதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க இலாகா இல்லாத அமைச்சர்கள் நிறைய வருவார்கள். 

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னை நிகழ்ச்சியில் உறுதிசெய்துவிட்டார். அ.தி.மு.க ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சாரக் கட்டணம் உயர்த்தவில்லை. தி.மு.க ஆட்சி வீட்டுக்குப் போகும்வரை அ.தி.மு.க-வினர் உறங்கக் கூடாது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/cs8xbyH