அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்யக் கோரி, இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க சேலம் புறநகர், சேலம் மாநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 2,000 பேருக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தாக்குதல்

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவிநீக்கம் செய்யக் கோரியும், தி.மு.க அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தி.மு.க அரசு தவறிவிட்டதாகக் கூறி கண்டன முழக்கமிட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றபோது, அங்கு வந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கட்சிக்காரர்களிடம் யாசகம் கேட்டிருக்கிறார். அதேபோல் காரில் புறப்பட்டுச் சென்ற மாவட்டச் செயலாளர்களையும் மறித்து, யாசகம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க-வினர் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரைத் தாக்கினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், சேலம் டவுன் காவல் நிலைய போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

from Tamilnadu News https://ift.tt/8sxoQgp