
ஆப்கானிஸ்தானில் குற்றவாளி ஒருவருக்குப் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது பொது மரணதண்டனையை நிறைவேற்றியிருக்கின்றனர்.

சீனாவுடன் இரண்டாவது எரிவாயு விநியோக ஒப்பந்தத்தில் கத்தார் இணைந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுதோறும் 4 மில்லியன் டன் எரிவாயு சீனாவுக்கு வழங்கப்படும்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது வருமான வரி செலுத்தாதது, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

டைடானிக் கப்பலைக் கடலின் ஆழத்தில் சென்று பார்க்க, 5 பேருடன் சென்ற டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. அமெரிக்க மற்றும் கனடிய படகுகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் ராணுவம் நடத்தியத் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

டென்மார்க் மற்றும் நெதர்லாந்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தென்னாப்பிரிக்கா. இந்த ஒப்பந்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பாப் பாடகியான Bebe Rexha நியூயார்க்கில் சமீபத்தில் பாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். அப்போது ஒரு ரசிகர் அவர்மீது போனை தூக்கி எறிந்தால், அவர் முகத்தில் காயமடைந்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.

பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தனது ஈராஸ் சுற்றுப்பயணத்திற்கான சர்வதேச தேதிகளை அறிவித்திருக்கிறார் . 2024-ல் ஐரோப்பா, ஆசியா மற்றும் பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/hZxmi9b
