‘சென்னையில் வாகனங்களில் பகல் நேரங்களில் 40 கிமீ–க்கு மேல் ஸ்பீடில் போனால், முதலில் 1,000 ரூபாய் அபராதச் சலானும், தொடர்ந்து அந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், 10,000 ரூபாய் அபராதச் சலானும் வரும்’ என்று நேற்று வரை வெளிவந்த அறிவிப்பால், வாகன ஓட்டிகள் செம கடுப்பில் இருக்கிறார்கள். 

நேற்று ஆஃப் லைனில் மட்டுமில்லை; ஆன் லைனிலும் ட்ரெண்டிங் இதுதான். 

‘‘முதல்ல ரோடை ஒழுங்காப் போடுங்க; அப்புறம் அபராதம் வசூலிக்கலாம்!’’

“இது மக்களோட நலனுக்குச் செய்கிற நடவடிக்கை மாதிரி தெரியவில்லை. காசு சம்பாதிக்கும் திட்டம் போல் இருக்கிறது!’’

‘‘வசூலிக்கிறதுக்கு எத்தனை வழிகள் இருக்கோ, அத்தனை வழிகளையும் ஃபாலோ பண்றாங்கப்பா!’’ 

‘‘40 கிமீதான் டாப் ஸ்பீடுன்னா, அப்புறம் ஹெல்மெட் எதுக்குய்யா?’’ 

‘‘நம்ம மினிஸ்டர் இது மாதிரி 40 கிமீ வேகத்தில் போவாரா?’’

– என்று வெரைட்டியாக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வலுத்த நிலையில், சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் (GCTP) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து இப்படி ஓர் அறிவிப்பு வந்திருக்கிறது. 

‘‘சோஷியல் மீடியா மற்றும் பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களுக்கும், ஸ்பீடு வயலேஷன்களைத் தடுக்க GCTP அமல்படுத்தி இருக்கும் அபராதச் சலான்கள் பற்றிய குழப்பங்களுக்கும் ஒரு தீர்வு. சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறை சில முக்கியமான 6 இடங்களில், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை இன்ஸ்டால் செய்திருக்கிறது. அந்த டிஸ்ப்ளேவில் – நீங்கள் குறிப்பிட்ட வேக அளவைத் தாண்டிப் போனால், அது உங்களை அலெர்ட் செய்யும். இந்த போர்டுகள், அலெர்ட்டுக்குத்தானே ஒழிய அபராதம் விதிப்பதற்கல்ல! இறுதி அபராதம் பற்றிய முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை!’’ என்று அந்த அறிவிப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

GCTP Clarification

காவல்துறை இப்படிச் சொன்னாலும், சில இடங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ANPR (Automated Number Plate Registration) கேமராக்கள், ஸ்பீடு வயலேஷனில் ஈடுபடுபவர்களுக்கு, சலான்களை அனுப்புவதாகவும் சொல்கிறார்கள்.

அதற்கும் இப்படிப் பதில் சொல்கிறது காவல்துறை. சென்னையில் முக்கியமான 10 இடங்களில் ANPR கேமராக்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வாகனங்களின் வேகம் கணக்கெடுக்கப்பட்டு, அதிக வேகங்களில் ‘வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறக்கும் வாகனங்களின் ரிஜிஸ்ட்ரேஷன் எண்கள் பதிவாவதை வைத்து, அந்த வாகனங்களுக்கு அபராதச் சலான்கள் பறக்குமாம். ஆனால், இதற்கு ஸ்பீடு லிமிட் எவ்வளவு என்று தெரியவில்லை. 

ரேடார் கேமரா சென்னையில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள 10 இடங்கள்…

1.அண்ணா சாலை (ஸ்பென்சர் பிளாசா)

2.அண்ணா அறிவாலயம் (Dms)

3.ஆலந்தூர் சந்திப்பு

4.பழைய விமான நிலையம் (எதிர்)

5.ECR (ஈஞ்சம்பாக்கம்)

6.அரசு மருத்துவமனை (பாரிஸ் கார்னர்)

7. டெய்லர்ஸ் சாலை (சந்தி)

8. அமைந்தகரை (புல்லா சந்திப்பு)

9.திருமங்கலம் ( எஸ்டேட் ரோடு )

10. மதுரவாயல் (ரேஷன் கடை)

இருந்தாலும், சென்னையில் அங்கங்கே செல்போனை மூஞ்சிக்கு நேரா காட்டிப் படமெடுக்கும் காவல்துறையினரிடமும், சிக்னல்களில் தொங்கும் கேமராக்களிடமும் கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே!

from Tamilnadu News https://ift.tt/4xZHzo3