அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை சோதனையைத் தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல்கட்டமாக கரூரிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் தம்பி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் தொடங்கிய சோதனை, தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெற்றன. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக நேற்று காலை 9 மணியளவில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதை நகர் பகுதியில் சக்திமெஸ் உரிமையாளர் கார்த்திக், அதிபர் ரமேஷ் ஆகிய இருவர் வீடுகளில் ஐந்து வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.

வருமான வரித்துறை சோதனை

மூன்று மணி நேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து அடுத்தடுத்து ஏழு இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக, மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்திருக்கும் பழனி முருகன் நகைக்கடையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை சோதனை நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றுவருகிறது.

from Tamilnadu News https://ift.tt/PWQFzax