பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருமண விழாவில் எதிர்க்கட்சிகளை வசைபாடி, சாபம் கொடுப்பதுதான் திராவிட மாடலா. இது அநாகரிகம். வாரிசு அரசியல் செய்யும் தி.மு.க-வுக்கு, எங்களைக் குறைகூற அருகதை இல்லை.

வானதி சீனிவாசன்

முதல்வர் திருமண நிகழ்வில் வாழ்த்துகளை மீறி கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். பிரதமர் மோடி பேசியது 100% உண்மை. அவர் பொய் பேசவில்லை. குடும்ப ஆட்சி நடக்கவில்லை எனச் சொல்லுங்கள். வாரிசு என்ற காரணத்துக்காக பதவி கொடுக்கவில்லை என்று சொல்லுங்கள். மகன் என்பதால் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முக்கியத்துவம்.

பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. முத்தாலக் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதியைக் கொடுக்காது. சுயநல அரசியலுக்காக பெண்கள் வாய்ப்பைப் பறிக்கக் கூடாது. பெரியார் மண் என்று சொல்கிற இந்த மண்ணில், உங்கள் அமைச்சர்களே பட்டியல் இன மக்களை இழிவாகப் பேசுகின்றனர்.

ஸ்டாலின்

தி.மு.க முழுக்க முழுக்க பட்டியலின மக்களுக்கு எதிராகச் செயல்படும் இயக்கமாக இருக்கிறது. முதல்வர் தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் இந்து மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறாரா… முதல்வர் எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கிறாரா?

மோடி எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கிறார். அவரைப் பற்றி பேச முதல்வருக்கு அடிப்படை தகுதியோ.. அருகதையோ இல்லை. உதயநிதி படத்திலும் நடிக்கிறார், வெளியிலும் நடிக்கிறார். தி.மு.க-வுக்கு வாக்களிப்பது… குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பது… ஊழலுக்கு வாக்களிப்பது என நாங்கள் சொல்கிறோம்.

சிதம்பரம் கோயில்

இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டு, சிதம்பரம் கோயில் விவகாரத்தில் வேலை செய்கிறது. பிரச்னையைக் கிளப்ப முயல்கின்றனர். இந்து மத விரோத எதிர்ப்பு நாடறிந்தது. சிதம்பரம் கோயில் பிரச்னையில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/Ma5fYjA