அப்செட்டில் பி.டி.ஆர்? – என்ன நடக்கிறது மதுரையில்?

பழனிவேல் தியாகராஜன்

“அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.டி.ஆர் உதாசீனப்படுத்தப்படுகிறார்” என்று அவருடைய ஆதரவாளர்கள் கொந்தளிக்கும் வகையில், மதுரையில் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

தமிழக அரசில் நிதியமைச்சராக இருந்து பரபரப்பாகச் செயல்பட்டுவந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சரின் திடீர் நடவடிக்கையால் துறை மாற்றப்பட்டு, சமீபகாலமாக அமைதியாகச் செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் மதுரையில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில், அவரை சக அமைச்சர்கள் உதாசீனப்படுத்தியதாக பி.டி.ஆரின் ஆதரவாளர்கள் கொதிக்கின்றனர்.

என்ன நடக்கிறது மதுரையில்? படிக்க இங்கே க்ளிக் செய்க…

அதிமுக மாஜிக்கள் மீது வழக்கு: அமைச்சரின் கடிதத்துக்கு ஆளுநரின் பதில்… 

ஆளுநர் ஆர்.என்.ரவி

மிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் விசாரணை தொடங்க அனுமதி வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில் மாநில அமைச்சரவை அனுப்பிய இசைவு ஆணைக்கு (Sanction) ஆளுநர் இதுநாள் வரை பதிலளிக்கவில்லையென்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் தரப்பிலிருந்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க…

——–

“வள்ளலாரைப் பற்றி உளறிக்கொண்டிருக்கிறார்” – ஆளுநரைச் சாடிய ஸ்டாலின்!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘ஓ.பி.ரவீந்திரநாத் MP தேர்தல் வெற்றி செல்லாது!’ – நீதிமன்றம்  தீர்ப்பு

ஓ.பி.ரவீந்திரநாத்

2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், `ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது. அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

ம.பி: பழங்குடி தொழிலாளியின் கால்களைக் கழுவிய முதல்வர்!

ம.பி முதல்வர்

த்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் கூலி வேலை செய்துவரும் பழங்குடியினத் தொழிலாளிமீது பிரவேஷ் சுக்லா (பாஜக நிர்வாகி) என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம், அதிர்ச்சியையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரவேஷ் சுக்லா புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

——

அஜித் பவார் என்ட்ரி’யால் அதிருப்தி… முதல்வர் ஷிண்டேவை நெருக்கும் எம்.எல்.ஏ-க்கள்!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

கழுகார் அப்டேட்ஸ்: ‘சர்ச்சை ஆடிட்டருடன் அண்ணாமலை!’

கழுகார் அப்டேட்ஸ்

ப்பு மாவட்டத்தில் அமைச்சர் அக்காவுக்கும், மேயர் தம்பிக்கும் அதிகார மோதல் நாளுக்குநாள் முற்றிக்கொண்டே செல்கிறது. தலைமையிலிருந்து வந்த ‘பெரிய அக்கா’, சமரசம் செய்துவைத்தும் அவர்களது பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. முதல்நாள் மாநகராட்சிப் பகுதியில் தம்பி ஆய்வு மேற்கொண்டால், மறுநாளே அதே இடத்தில் அக்கா ஆய்வு மேற்கொள்கிறாராம்.

கழுகார் அப்டேட்ஸில் மேலும்…

தாமதமாகும் அணி நிர்வாகிகள் நியமனம்… உதயநிதிதான் காரணமா? |

ஆரூடம் சொன்ன மத்திய அமைச்சர்!

ஐ.பி.எஸ்-களைப் போட்டுக்கொடுத்த உளவுத்துறை!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

ஏழைகளை விரட்டியடிக்கிறதா இந்திய ரயில்வே..?

ரயில் பயணிகள்

முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்கள், இந்திய ரயில்வேயின் முன்னேற்றத்தின் அடையாளம் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமன்றி, அந்தப் பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பற்றி ரயில்வே நிர்வாகம் துளியும் கவலைப்படுவதில்லை. பலர் நின்றுகொண்டே பயணிக்கிறார்கள்.

இந்தியாவில் எல்லா ரயில்களிலும் இந்தக் கொடுமையைக் காண முடிகிறது.

ஏழைகளை விரட்டியடிக்கிறதா இந்திய ரயில்வே..?

இது குறித்து இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றுள்ள விரிவான அலசல் கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

பிடிக்காத வேலையை விடுவதற்கு முன்… 

வேலையை விட நினைக்கிறீர்களா…

‘இந்த வேலையை இன்றே விட்டுவிட வேண்டும்…’

டார்ச்சர், பிடித்த விஷயத்தை செய்ய முடியவில்லையே என்றெல்லாம் நினைத்து வேலையை இப்போதே விட்டுவிட வேண்டும் என்றுதான் பலருக்கும் நினைக்கிறார்களே தவிர, அதைச் செய்யும்முன் கட்டாயம் செய்திருக்க வேண்டிய பல விஷயங்களை செய்திருக்கிறோமா என்று பலரும் பார்ப்பதில்லை.

அந்த விஷயங்கள் என்னென்ன..?

யாரெல்லாம் வேலையை விடக் கூடாது..?

இப்போதே வேலையை விட்டுவிட நினைப்பவர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

மீன் அசைவமா, சைவமா..? –  விவாதமும் மருத்துவர் விளக்கமும்!

மீன் உணவு

மீபத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் நோய்நொடி இல்லாமலும் இருக்கலாம். மீன் ஒரு சைவ உணவு. மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும்” என்று விடுத்த கோரிக்கை, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மீன் சைவமா… அசைவமா… என்ற விவாதம் தற்போது சூடுபறக்க நடந்து கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து மருத்துவர் தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் என்ன?

படிக்க இங்கே க்ளிக் செய்க….

Leo -வில் தனுஷ் நடிக்கிறாரா? – வைரல் செய்தியின் பின்னணி…

D50 – தனுஷ்

‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும், அவரது ஐம்பதாவது படமான ‘டி 50’யின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது. தனுஷே அதனை இயக்குகிறார்.

இதற்கிடையே விஜய்யின் ‘லியோ’வில் தனுஷ் நடிக்கிறார் என்கிற தகவல் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மைதானா..?

செய்தியின் பின்னணியை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க..

from Tamilnadu News https://ift.tt/Y4g5Kif