ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த 1991-96 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் செல்வி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, பின்னர் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சசிகலா

தொடர்ந்து விசாரணை நடக்கவே, 2017-ல் வழக்கு முடிவுக்கு வந்தது. ஜெயலலிதா அப்போது உயிரோடு இல்லாததால் மற்ற மூவரும் சிறை செல்ல நேரிட்டது. இவ்வழக்கில் செல்வி ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய தங்க நகைகள் உட்பட பல்வேறு உடைமைகள் பெங்களூரு நீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்டன. 1996 டிசம்பர் 11 -ம் தேதியே போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பல்வேறு விலையுர்ந்த பொருள்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை பறிமுதல் செய்தது. வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதால் செல்வி ஜெயலலிதாவின் உடமைகளும் பெங்களுக்கு நிதிமன்றத்துக்கு கைமாற்றப்பட்டதாக கருதப்பட்டன.

இந்நிலையில் கர்நாடகா அரசு வசம் இருக்கிற செல்வி ஜெயலலிதாவின் பொருள்களை ஏலம்விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கர்நாடகா அரசு கருவுலத்தில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர்.

ஜெயலலிதா

அதனை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருள்களை ஏலம் விட வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதற்கிடையில் கைப்பற்ற பொருள்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடதக்கது.

கைப்பற்ற பொருள்களில் புடவைகளின் எண்ணிக்கை மட்டும் 11 ஆயிரத்து 344 என்றும் காலணிகள் 750 எனத் தெரிகிறது. இதைத்தாண்டி ஏசி, தொலைபேசி, கட்டில்கள் போன்ற பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஏலம் விடக் கோரிய மனு மீதான விசாரணை கடந்த வாரம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கவே, “செல்வி ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் மொத்தம் 29 பொருள்கள் உள்ளன. ஆனால் வரிசை எண் 28-ல் உள்ள 30 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே நீதிமன்றம் வசமிருக்கிறது மற்ற பொருட்கள் இல்லை” என தெரிவிக்க வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போயஸ் கார்டன்

இதையெடுத்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி, “விலை உயர்ந்த கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருள்கள் உட்பட, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த 28 பொருட்களை, கர்நாடக கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்” என கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்படுமா அல்லது குடும்பத்தினராக கருதக்கூடிய தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்படுமா என்பது அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும். இவ்வழக்கு ஜூலை 12 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.!

from Tamilnadu News https://ift.tt/tazdlIC