மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் குன்னத்தூரில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “வருகின்ற ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுவது மதுரை மண்ணிற்கு கிடைத்த பெருமையாகும்.

அன்னதானம்

மக்களுக்கான திட்டங்களை கொடுக்கும் இடத்தில் இருந்த நாம் இன்றைக்கு மக்களுக்காக கேட்கும்  இடத்தில் இருக்கிறோம். விரைவில், மக்களுக்கு  கொடுக்கும் இடத்திற்கு நிச்சயம் வருவோம் .

கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார்

திமுக ஆட்சியில் 30 ஆயிரம் கோடி ஊழல், டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல், பத்திரப்பதிவுத் துறையில் 3000 கோடி முறைகேடு என இதயம் வெடிக்கும் வகையில் ஊழல் நடக்கிறது.

இன்றைக்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. தக்காளி, இஞ்சி, பருப்பு விலைகள் உயர்ந்து விட்டது. தக்காளி விலையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. இதனால் தக்காளி சட்னியே மக்களுக்கு மறந்துவிட்டது, அதேபோல் இஞ்சி விலையும் ஏறிவிட்டதால் இஞ்சி சட்னியும் மறந்துவிட்டது. ஆனால், இதைப் பற்றி  கவலைப்படாமல் அமைச்சர்கள் ஏகடியம் பேசி வருகிறார்கள் .

ஆர்.பி.உதயகுமார்

இதை  கண்டிக்கும் இடத்தில் இருக்கும் முதலமைச்சரோ, ஒரு கூட்டத்தில், ‘எதிர்க்கட்சியாக இருந்தபோது கெட்டதைக்கூட தைரியமாக செய்தோம்’ என்று கூறுகிறார்.

மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். விரைவில் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்” என்று பேசினார்.

from Tamilnadu News https://ift.tt/r2Hlzos