கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைப்பற்றி ஜனாதிபதிக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். ஒரு கண்ணாடியை பார்த்து முதல்வர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்னைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது.

தமிழகத்தில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன, திமுக அரசு மீது எவ்வளவு அதிருப்தி உள்ளது, திமுக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அது தவறு என்றால், எதற்காக இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். செந்தில் பாலாஜியை பாதுகாத்து உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். அந்த கடித்தத்தை படிக்கும்போது, செந்தில் பாலாஜியை ஒரு உத்தமராகவும், புத்தராகவும், மாநிலத்தை காக்க வந்த சேவகாராகும் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர்கள், எம்.பி,எம்.எல்.ஏ ஆளுநரை தரக்குறைவாக ஒருமையில் பேசுகின்றனர்.
தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லாத சூழல் நிலவுகிறது. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். முதல்வரின் கடிதத்தில் அவரின் இயலாமை தான் வெளிப்படுகிறது.

ஆளுநருக்கு ஜி.யு போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால் ஜி யு போப் குறித்து சொந்த கருத்தை சொல்லி இருக்கிறார். கலா\சாரத்தைப் பற்றி, பண்பாட்டை பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது. ஆளுநர் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என நினைக்கக்கூடாது.” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/uJG6SMv
