டாஸ்மாக்: தமிழகத்தை தள்ளாட வைக்கும் ‘கட்டிங்’ திட்டம்!

டாஸ்மாக்

டாஸ்மாக் தொடர்பான இலாகா வேறு அமைச்சருக்கு மாற்றப்பட்டும், சர்ச்சைகள் ஓயவில்லை.

500 சதுர அடி டாஸ்மாக் கடைகள், தனி கட்டிங், 90 மி.லி அளவு டெட்ரா பாக்கெட் திட்டம், காலை கடை திறப்பு கோரிக்கை என அண்மையில் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றை அடுக்கினார் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி.

அமைச்சரின் இந்தப் பேச்சு, ‘தமிழகத்தில் மேலும் குடியை அதிகரிக்கும் நடவடிக்கை’ எனக் கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளது.

இந்த 90 மி.லி அளவு ‘கட்டிங்’ திட்டம், காலையிலே கடை திறப்பு போன்றவை தமிழகத்தை தள்ளாட வைக்கும் யோசனைகள் என எதிர்க்கட்சிகளும், மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்த விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…

பன்னீரின் திடீர் ‘கொடநாடு மூவ்’: பின்னணி என்ன?

ஓபிஎஸ் – இபிஎஸ்

ற்றைத் தலைமை விவகாரத்தால் ஓரங்கட்டப்பட்டு, தனி அணியாகச் செயல்பட்டுவரும் பன்னீருக்கு நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பா.ஜ.க என எதுவுமே கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில், “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இதன் பின்னணி என்ன..? இது குறித்து அதிமுக தரப்பில் என்ன சொல்கிறார்கள்..?

படிக்க இங்கே க்ளிக் செய்க…

இளைஞரணி: உதயநிதியின் சாதனைகளும் சறுக்கல்களும்!

உதயநிதி

தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அணியின் தலைவராக அவரின் செயல்பாடு கட்சிக்குள் ‘பாசிட்டிவ்’ வைபரேஷனையே உருவாக்கியிருக்கிறது.

அதேநேரத்தில், “எளிதாக அணுகும் நிலையில் அவர் இல்லை. இன்னும், அவர் முழு அரசியல்வாதியாக மாறவில்லை” என்கிற விமர்சனங்களும் உதயநிதி மீது எழுகின்றன.

இளைஞரணிச் செயலாளராக உதயநிதி சாதித்த, சறுக்கிய இடங்கள், சந்திக்கும் பிரச்னைகள், சர்ச்சைகள், அவர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன..?

இது குறித்து இன்று வெளியான ஜூனியர் விகடனின் கவர் ஸ்டோரியை படிக்க இங்கே க்ளிக் செய்க…

அடுத்தடுத்து விவாகரத்து… மறைந்த மயில்சாமி வீட்டில் தொடரும் சோகம்!

மயில்சாமி

யில்சாமி இறந்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தில் நிகழ்ந்திருக்கும் சில சம்பவங்கள் மயில்சாமியின் ரசிகர்கள் மற்றும் அவரது திரைத்துறை நண்பர்கள் பலரையும் வருத்தத்தில் தள்ளியிருக்கிறது.

மயில்சாமி தான் உயிரோடிருந்த காலத்தில் பலருக்கும் பல உதவிகளைச் செய்தவர். அவரது குடும்பத்தில், அதுவும் அவர் இறந்த கொஞ்ச நாட்களிலேயே இப்படியா நடக்க வேண்டும் என வேதனைப்படுகின்றனர்.

இது குறித்த தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க….

மேற்கு வங்கம்: உள்ளாட்சித் தேர்தல்  வன்முறைகளுக்கு யார் காரணம்?!

மேற்கு வங்க கலவரம்

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.

பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினரிடையே நடைபெற்ற மோதல் சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த வன்முறைகளுக்கு யார் காரணம்..?

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘அப்பார்ட்மென்ட்’ வாங்கும் முன்னர்…

அப்பார்ட்மென்ட்

கர்ப்புறங்களில் அப்பார்ட்மென்ட் வாங்கும்போது யு.டி.எஸ் (Undivided Share) பார்த்து வாங்க வேண்டியது முக்கியம் என்பது காலங்காலமாக அறிவுறுத்தப்படுகிறது.

அதென்ன யு.டி.எஸ், அதை எப்படிக் கணக்கிடுவது என்கிற தகவல் தொடங்கி, ஏற்கெனவே அப்பார்ட்மென்ட் வாசிகளாக இருப்போர் சந்திக்கிற பரவலான பிரச்னைகளுக்கான தீர்வுகள் வரை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் வழக்கறிஞரும் பில்டருமான முத்துசாமி…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

Wrong Side Driving: இப்படி மட்டும் வண்டி ஓட்டாதீங்க!

Wrong Side Driving

ரு புள்ளி விவரம் இப்படிச் சொல்கிறது. 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், சுமார் 43,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், ‘Road Accidents in India’ எனும் தலைப்பில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

நா.முத்துக்குமார்: அனுபவங்கள் பகிரும் மாரி செல்வராஜ்!

நா.முத்துக்குமார்

ன்று மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் 48 -வது பிறந்ததினம். தமிழ்ப் பாடலாசிரியர்களில் குறுகிய காலகட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது நா.முத்துக்குமாரின் வரிகளாக மட்டுமே இருக்க முடியும்.

அவர் இறந்த பிறகு விகடன் தடம் இதழில் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் நா.முத்துக்குமாருடனான தன் அனுபவங்கள் குறித்து மாரி செல்வராஜ் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

01-09-2016 தேதியில் வெளியான அந்த கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/PYr19Il