திருநெல்வேலி: ஆடி முதல் நாளான இன்று பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் நடந்தது.
மதுரை:

தனியார் பிளாஸ்டிக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்கள்.

சேலம்:

ஆசிரியர்கள் நியமனத் தேர்வை நடத்தக் கோரி, சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்.

தேனி:

தேவதானப்பட்டி கக்கன் ஜி நகர் சாலையை சீரமைக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர்:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வுசெய்தார்.

சென்னை:

சைதாப்பேட்டையிலுள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:

மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சீர்காழியில் நடந்தது.

விழுப்புரம்:

அமைச்சர் பொன்முடி வீட்டில் CRPF போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், வீட்டுக்குள் நுழைய தமிழக போலீஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ராமேஸ்வரம்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ராமேஸ்வரம்:

கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் 15 நாள்கள் ஆலய வழிபாட்டு பயிற்சிப் பெற்றவர்களுக்கு, பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்:

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேல்மொணவூரிலுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி:

காவல்துறையில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட காவலர்களுக்குப் நியமன பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வழங்கினர்.

புதுச்சேரி:

கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கிய பேரவை சார்பாக, புதுவை தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் புத்தகங்களை வெளியிட்டார்.

புதுச்சேரி:

பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் போராட்டக் குழுவினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

மத்திய சமூகநீதித்துறையின் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே,
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

புதுச்சேரி:

மாநிலம் முழுவதும் பா.ஜ.க நிர்வாகிகள் அவரவர் தொகுதியில் சிற்றுண்டி உண்ணக்கூடிய (டிஃபன் பைடெக்) நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி:

சுடுகாட்டை அபகரித்தவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்துக்குப் பாடையுடன் வந்த கிராம மக்கள்.

மதுரை:

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதி சிலை முன்பு செல்ஃபி எடுத்து கொண்ட மக்கள்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில், வடசேரி பகுதியில் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர்.

கன்னியாகுமரி:

ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வழிபட்ட மக்கள்.

தூத்துக்குடி:

பாபநாசம் அணையிலிருந்து 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விழுப்புரம்:

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.

தென்காசி:

பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

தென்காசி:

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் ஆட்சியர் துரை.ரவிசந்திரன்.

தேனி:

பெரியகுளம் தி.மு.க., எம்.எல்.ஏ., சரவணக்குமாரிடம் வீடியோ காலில் பேசிப் பணம் பறித்த, ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை:

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபடுவதால், தலைமைச் செயலகத்தில் வாகனங்களைச் சோதனையிடும் போலீஸார்.

சென்னை:

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடியின் அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது.

சென்னை:

ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள தேசியக்கொடியைப் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

விருதுநகர்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் மலையேறும் பக்தர்கள்.

தஞ்சாவூர்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த உறவினர்கள்.

ஈரோடு:

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218-வது நினைவு தினத்தை ஒட்டி, அவரது படத்துக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி செலுத்தினார்.

மதுரை:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ராமநாதபுரம்:

கீழக்கரைக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கடலோரம் நடைபயிற்சி செய்ததுடன் கடலில் நீந்தியும் மகிழ்ந்தார்.

சென்னை:

காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

from Tamilnadu News https://ift.tt/DAluQJc