காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைகட்ட முயற்சி செய்துவரும் கர்நாடகா அரசு குறித்து, தூத்துக்குடியில் இருக்கும் பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மேக்கேதாட்டு அணை கட்டப்பட  திட்டமிட்டிருப்பது கடைக்கோடி மக்களுக்கு தி.மு.க செய்யும் துரோகம். மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். ஆனால், அவர் கூற மாட்டார். இதற்கு முன்பு  பா.ஜ.க, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு 117 டிஎம்சி தண்ணீர் வரவழைத்தது.

சசிகலா புஷ்பா

ஆகவே, முதல்வர் அங்கே போய் எதிர்ப்பை காட்டி விட்டுவர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. தி.மு.கவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கம். ஏனென்றால் கிட்டத்தட்ட 75 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கக் கூடிய திராவிட கட்சிகள், இன்று பா.ஜ.க-வில் ஒரு தலை சிறந்த பிரதமராக உலகமே கொண்டாடக்கூடிய நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு உள்ளே வந்தபோது பா.ஜ.கவை ஒரு தவறான கட்சி போல சித்தரித்தது. அதோடு `கோ பேக் மோடி’ அது இது என்று சொல்லி மக்களுடைய மனதில் நஞ்சை விதைத்தார்கள்.

ஆனால், இன்று அண்ணாமலை என்று ஒரு தலைவர் வருவார்  என்று அப்போது அவர்களுக்கு தெரியாது. மோடிஜியுடைய புகழ் என்ன என்பது பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக மாநில தலைவர் அண்ணாமலை, ’தி.மு.க பைல்ஸ்’ என்ற ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அண்ணாமலை நடைப்  பயணம் மேற்கொள்ளும்போது பட்டி தொட்டி எங்கும் தி.மு.கவின் இரண்டாவது உழல் பட்டியல் வெளிவரப் போகிறது. தி.மு.க காலம், காலமாக செய்த பல ஆயிரம் கோடி ஊழல் பணத்தை மறைக்க முடியாது. அதனால் அவர்கள் அங்கும், இங்கும் ஓடுகிறார்கள்.

சசிகலா புஷ்பா

இதனால் கருப்பு பணத்தை நிச்சயமாக ஒழிப்பதற்கு உலக அளவில் தமிழ்நாட்டில் உள்ள கருப்பு முதலைகளாக இருக்கக்கூடியவர்கள் தி.மு.கவில் உள்ள பலர்தான். தி.மு.கவினர் அதிகமாக வெளிநாட்டில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை சோதனையில், மூன்றாவது அமைச்சராக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமைச்சர்களாகக் கூட (கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்) இருக்கலாம். எம்.பி.யாக (கனிமொழி) கூட இருக்கலாம்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/kIeLHQZ