மேக்கேதாட்டூ அணை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா‌.ஜ‌.க நிர்வாகிகள் கறுப்பு உடை அணிந்து செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ‌.க மாநில மகளிரணிச் செயலாளர் மோகனபிரியா, நேற்று மாலை ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

பா.ஜ.க மகளிரணிச் செயலாளர்

அப்போது, `மக்கள் யாரும் 4, 5 நாள்களுக்கு தக்காளியை வாங்காமல் இருந்தால், விலை தானாகக் குறையும்’ என பா‌.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா சொல்லியிருப்பது குறித்து தங்களின் கருத்து என்ன என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினோம்.

அதற்குப் பதிலளித்த மோகனபிரியா, “தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஹெச்.ராஜா கூறியிருப்பது, அவரின் தனிப்பட்ட கருத்து” எனத் தெரிவித்தார். உடனே அவர் அருகில் அமர்ந்திருந்த பா.ஜ.க-வினர் அவரை அழைத்து ஏதோ பேச, “இது ஹெச்.ராஜாவின் தனிப்பட்டக் கருத்து என்று சொல்ல முடியாது. தக்காளி விலை, வெங்காயம் விலையைக் குறைக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

from Tamilnadu News https://ift.tt/89QPqFU