புதுச்சேரயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், “மாறுபட்ட கொள்கை முடிவுகளைக் கொண்ட காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க புதிய கூட்டணியை அமைத்திருக்கின்றன. அந்தக் கூட்டணிக்கு `இந்தியா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். `இந்தியா’ என்று பெயர் வைக்கும்போது பல்வேறு தர்ம சங்கடங்கள் வாக்காளர்களுக்கு ஏற்படும். எனவே அதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பொருள். இவர்கள் மதச்சார்பற்ற கட்சிகள் என்று பறைசாற்றிக்கொண்டனர். ஆனால் இந்தக் கூட்டணியில் `மதச்சார்பற்ற’ என்ற பெயரே இல்லை. எனவே இவர்கள் மதச்சார்பற்ற கட்சிகள் என்று ஏற்கனவே கூறி வந்தது போலியான வேஷம்.

முதல்வர் ஸ்டாலின்

 இவர்கள் மதச்சார்பின்மையைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதை இஸ்லாமியர்கள், கிறிஸ்துவ மக்கள் புரிந்துகொண்டு, தேச ஒற்றுமைக்கு வழி வகுக்கும் எடப்பாடியார் தலைமையில் அமையும் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தில் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும், எடப்பாடியார் தலைமையில் அமையும் எங்களது கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இன்னும் 10 தினங்களுக்குள் பல அமைச்சர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்படுவார்கள். எனவே வருங்காலத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவைக் கூட்டத்தை புழல் சிறையில்தான் நடத்துவார் எனத் தெரிகிறது. தமிழக தி.மு.க ஆட்சியின்மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/qU9lMTF