புதியதாக வாங்கிய மர பீரோவில், பூஞ்சைகள் உருவாகி தன் மனைவியின் பட்டுப் புடவைகளைச் சேதப்படுத்தியதால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபருக்கு, 30,000 ரூபாயை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஃபர்னீச்சர் பொருள்களை விற்பனை செய்யும் பெப்பர்ஃப்ரை (Pepperfry) ஆன்லைன் ஸ்டோரில் இருந்து 18,000 ரூபாய் கொடுத்து மரத்தாலான பீரோவை (wardrobe) வாங்கி இருக்கிறார்.
சில நாட்களிலேயே பூஞ்சைகளால் தன்னுடைய மனைவியின் பட்டுப் புடவைகள் சேதமடைந்துள்ளது. இதனை பெப்பர்ஃப்ரையின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அவர்களின் செயல்பாடுகளில் திருப்தியடையாத மகேஷ், நுகர்வோர் நீதிமன்றத்தில் 5 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குப் பதிவு செய்தார். மேலும் மர பீரோவில் ஏற்பட்டிருந்த பூஞ்சை தொற்று படங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.
இந்நிலையில் மோசமான பருவ நிலையால் பூஞ்சைகள் உருவாகி இருக்கலாம், சேதமடைந்த பீரோவை விற்பனை செய்யவில்லை என நிறுவனத்தின் தரப்பில் இருந்து வாதம் செய்யப்பட்டது. 2023 ஜூன் 6 அன்று, மகேஷ் தனது மனைவியின் சேதமடைந்த புடவைகளின் புகைப்படங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதை நீதிமன்றம் அறிந்தது.

இருந்த போதும், மோசமான பொருளை விற்பனை செய்ததற்காக 18,000 ரூபாய் தொகையைத் திருப்பி வழங்கவும், தம்பதியினருக்கு ஏற்படுத்திய பிரச்னைக்காக 10,000 ரூபாயை வழங்கவும், சட்ட செலவுகளுக்கு 2,000 ரூபாய் என மொத்தம் 30,000 ரூபாயை வழங்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamilnadu News https://ift.tt/hBpFsZf

வணக்கம் தோழரே எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் இந்த blog website ஆனது free ya இல்லை கட்டணம் எதேனும் செலுத்தினீர்களா
LikeLike
இதனால் ஏதேனும் உங்களுக்கு பணம் வருகிறதா
LikeLike