சென்னை:

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக, தி.மு.க., அரசைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்:

குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியை கலெக்டர் பழனி தொடங்கிவைத்தார்.

ராமநாதபுரம்:

மகளிர் உதவித் தொகை பெறுவதற்கான கலந்தாய்வு சிறப்பு கிராமசபைக் கூட்டம் பட்டினம்காத்தான் ஊராட்சி அலுவலக வாயிலில் நடந்தது.

சென்னை:

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கலைஞர் மகளிர் உதவித்தொகை விண்ணப்பப் படிவங்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாக விநியோகித்தனர்.

விழுப்புரம்:

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக தி.மு.க., அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்துக்கு தக்காளி பொம்மையுடன் வாகனத்தில் வந்த அ.தி.மு.க-வினர்.

வேலூர்:

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

மதுரை:

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக தி.மு.க., அரசைக் கண்டித்து புதிய மற்றும் பழைய விலை பட்டியல் அடங்கிய ஃபிளக்ஸ் பேனர் வைத்து அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்:

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக தி.மு.க., அரசைக் கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்:

பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக, பழுதான கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

நீலகிரி:

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக தி.மு.க., அரசைக் கண்டித்து
அ.தி.மு.க., சார்பில் ஒருவர் தக்காளி, வெங்காயம், பால் பாக்கெட்டாலான மாலையை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திருநெல்வேலி:

வடக்கன்குளம் பெருங்குடி, அண்ணா நகரில் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

விருதுநகர்:

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில், சுடுமண் தோசை கல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

ஈரோடு:

கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்குப் பல்வேறு இடங்களிலிருந்து விற்பனைக்காக ஏராளமான மாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

கோவை:

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக தி.மு.க., அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க-வினர் கழுத்தில் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்:

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.

திருநெல்வேலி:

மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பாக, கலைஞரின் `வரும் முன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம், பெருமாள்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.

தூத்துக்குடி:

ஸ்ரீவைகுண்டம் அருகே சாலையோரத்தில் கிடந்த 3 அடி உயர அம்மன் சிலையை மீட்டு, வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்த போலீஸார், சிலை கடத்தி வரப்பட்டதா என விசாரிக்கின்றனர்.

ஈரோடு:

கலைஞர் மகளிர் உதவித்தொகை விண்ணப்பப் படிவங்கள் மற்றும் டோக்கன்களை நியாய விலைக்கடை ஊழியர்கள் வீடுவீடாக விநியோகித்தனர்.

கன்னியாகுமரி:

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக தி.மு.க., அரசைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்புறம் மேடையில் வைக்கப்பட்டிருந்த தக்காளியை போட்டிப் போட்டு வாங்க குவிந்த மகளிர்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் மாநகராட்சி அலுலலகத்தில் நடந்த மக்கள் குறை தீரக்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

கன்னியாகுமரி:

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையை நேரில் ஆய்வுசெய்தனர்.

புதுச்சேரி:

வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.230 மதிப்புள்ள பசுமை காய்கறி விதைகள் அடங்கிய பெட்டகத்தை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி:

பூரணாங்குப்பம் பகுதியில் நடந்த இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட சபாநாயகர் செல்வம், முதியோர்களுக்கு போர்வைகளை வழங்கினார்.

தஞ்சாவூர்:

ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்று நிலச்சரிவில் சிக்கிய நான்கு நபர்கள் சொந்த ஊரான தேனிக்குப் பாதுகாப்பாகத் திரும்பினர்.

கன்னியாகுமரி:

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காய்கறிகள் மாலை அணிந்து கலந்துகொண்ட மகளிர்.

சென்னை:

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை மற்றும் சின்னத்தை மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

from Tamilnadu News https://ift.tt/oAUrMiI