இன்று பணக்காரர்கள் முதல் சாமானிய மக்கள் வரை ஜி.எஸ்.டி செலுத்தாதவர்கள் என எவரும் இல்லை. நீங்கள் வாங்கும் குண்டூசியில் இருந்து கோட் சூட் வரை ஜி.எஸ்.டி உண்டு.

எதற்கு, ஏன், எவ்வளவு என்று தெரியாமல் உங்களின் பணம் நூதன முறையில் பெறப்படுகிறது. இந்த குமுறல் வெகுஜன மக்கள் மத்தியில் இருந்தாலும், `கேட்பாரற்று என் பணம் போகிறதே’ என ட்விட்டரில் ஒருவர் புள்ளிவிவரத்தோடு கூறிய பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சஞ்சித் கோயல்

பெங்களூருவைச் சேர்ந்த சஞ்சித் கோயல் என்பவர் ஃபிளிப்கார்டில் கேட்டகிரி மேனேஜராக (Category Manager) பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “இன்று நான் 5,000 ரூபாய் சம்பாதித்தேன். இதில் அரசுக்கு 30 சதவிகிதம் வருமான வரியாகச் செலுத்தவேண்டும்.

காபி, டீ போன்ற பானங்களை வாங்க வேண்டும் எனில், மீத பணத்தில் இருந்து 28 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். எனது வருமானத்தில் 50 சதவீதத்திற்கு மேல் அரசுக்குச் செலுத்துவதற்காகவே, நான் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைக்கிறேன் என்பதை உணர்ந்தேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில் அடிப்படை பொருட்களில் இருந்து அரசு எவ்வாறு ஜி.எஸ்.டி பெறுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். அதில் பொருளாதார கணக்கின்படி, “20 ரூபாய் சாக்கோ பாரில், மொத்தமாக 5.5 ரூபாய் ஜி.எஸ்.டி பெறப்படுகிறது. இது பொருளின் இறுதி விலையின் 27.5 சதவிகிதத்திற்குச் சமம்” என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்குப் பலரும் தங்களது ஆதங்க கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர் “உற்பத்தி, போக்குவரத்து, ஊழியர்களின் வரி போன்றவற்றுக்கான எரிபொருளின் மீதான வரியைக் கணக்கிட்டால், அது அதிகமாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வரி விதிக்க வேண்டியது தான், அதற்காக இப்படியா?

from Tamilnadu News https://ift.tt/1BaL734