மணிப்பூரில் உள்ள `மீட்டி’ மற்றும் `குக்கி’ சமூகத்தினருக்கு இடையே கடந்த மூன்று மாதங்களாக வன்முறை மோதல்கள் நிலவிவரும் நிலையில், மே-4 ம்தேதி குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகியிருக்கிறது.
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமைச் சம்பவத்திற்கு திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ராஷ்மிகா மந்தனா, “நான் படித்ததை என்னால் நம்பவே முடியவில்லை, மனதை குலைக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், இந்த உலகில் என்னதான் நடக்கிறது? என்று புரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நான் நிற்கிறேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ரகுல் ப்ரீத்தி சிங், “ மணிப்பூர் தொடர்பான வீடியோ மிகவும் கவலையளிக்கிறது. இது மனிதநேயத்துக்கு அவமானம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன். அவ்வாறு இருந்தால் வேறு யாரும் அவ்வாறு செய்ய நினைக்கத் துணிய மாட்டார்கள். அப்பெண்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மணிப்பூர் சம்பவம் குறித்து பதிவிட்ட பிரியங்கா சோப்ரா. “தற்போதுதான் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த குற்றச்சம்பவம் நடைபெற்று 77 நாட்களுக்கு பிறகுதான் தெரிய வந்திருக்கிறது. தற்போது என்ன நடந்தது, ஏன், எதற்கு என்று யோசிக்காமல் இனி பெண்களை பகடைக்காயாக உபயோகித்துக் கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இந்த குற்றத்திற்கு விரைவாக நீதி கிடைக்க அனைவரும் சேர்ந்துக் குரல் கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Manipur women- The society, the community, humanity everything failed on various levels. We need to condemn this act with all our integrity as humans. This could only be a sample of many such brutality. Shutting down the media is not gonna help the people in trouble. #Manipur
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 20, 2023
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரியா பவானி சங்கர், “ மணிப்பூர் பெண்கள் – இந்த சமூகம், இனம், மனிதநேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து உள்ளன. மனிதர்களாகிய நாம் இந்த செயலை நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். பல்வேறு கொடூர சம்பவங்களுக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது” என்று பதிவிட்டிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/WZ1yiqf
