`நீதிபதிகள் யாரும் தங்களுக்கான நெறிமுறை வசதிகளை மற்றவர்கள் யாருக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது’ என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து பிரயாக்ராஜுக்கு ரயிலில் தன்னுடைய மனைவியுடன் சென்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கௌதம் சவுத்ரி, ரயில் தாமதமானது குறித்தும், குளிர்பானம் கேட்டபோது யாரும் கொண்டுவந்து கொடுக்காதது குறித்தும் வடக்கு மத்திய ரயில்வே மேலாளரிடம் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையில்தான் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “ரயில்வே பணியாளர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. நீதிபதிகள் தங்களுக்கு கிடைக்கும் நெறிமுறை வசதிகளை, இந்த சமூகத்திலிருந்து தங்களை வேறுபடுத்தும் விதமாகவோ அல்லது அதிகாரத்தின் வெளிப்பாடாகச் சிறப்புரிமைக்கான கோரிக்கையை வலியுறுத்தும் விதமாகவோ பயன்படுத்தக் கூடாது.

நீதிமன்றத்துக்குள்ளேயும், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங்களின் அதிகாரத்தின் மீதான நீதிபதிகளின் செயல்பாடுகளே, நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் இந்தச் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன. நீதித்துறைக்குள் சுய சிந்தனை மற்றும் ஆலோசனை அவசியம். எனவே நீதிபதிகள் யாரும், தங்களுக்கு வழங்கப்படும் நெறிமுறை வசதிகளை மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், நீதித்துறை மீது பொது விமர்சனத்தை ஏற்படுத்தும் வகையிலும் பயன்படுத்தக் கூடாது” என்று சந்திரசூட் குறிப்பிட்டிருந்தார்.
from Tamilnadu News https://ift.tt/FLbmcq4
