2022-23-ம் நிதியாண்டில் இந்திய வங்கிகள் 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக்கடன்களை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வங்கிகள் இதுவரை ரத்து செய்த வாராக் கடன்களின் மதிப்பு 10.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

2012-13-ம் நிதியாண்டு முதல் 2022-23 -ம் நிதியாண்டு வரை வங்கிகள் மொத்தம் 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக்கடன்களை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் வாயிலாக தெரிகிறது.

ரிசர்வ் வங்கி

ஆண்டு வாரியாக வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன்கள்:

2012-13 : 42,235 கோடி ரூபாய்

2013-14 : 32,992 கோடி ரூபாய்

2014-15 : 58,786 கோடி ரூபாய்

2015-16 : 70,413 கோடி ரூபாய்

2016-17 : 108,373 கோடி ரூபாய்

2017-18 : 161,328 கோடி ரூபாய்

2018-19 : 236,265 கோடி ரூபாய்

2019-20 : 234,170 கோடி ரூபாய்

2020-21 : 202,781 கோடி ரூபாய்

2021-22 : 174,966 கோடி ரூபாய்

2022-23 : 209,144 கோடி ரூபாய்

வங்கிகள் அடிப்படையில், 2022-23-ம் நிதியாண்டில் அதிகளவில் வாராக்கடன்களை ரத்து செய்த வங்கியாக எஸ்.பி.ஐ முதலிடத்தில் இருக்கிறது. எஸ்.பி.ஐ வங்கி மட்டும் 24,061 கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக் கடன்களை ரத்து செய்துள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 19,175 கோடி ரூபாயும், பேங்க் ஆஃப் பரோடா 17,998 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி 16,578 கோடி ரூபாயும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 10,258 கோடி ரூபாயும் ரத்து செய்துள்ளன.

பெரும்பாலும், பொதுத்துறை வங்கிகளே அதிகளவில் வாராக்கடன்களை ரத்து செய்துள்ளன. கடந்த மூன்று நிதியாண்டுகளில் ரத்து செய்யப்பட்ட வாராக் கடன்களில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் 62.45% (ரூ.3.66 லட்சம் கோடி) தொகையை ரத்து செய்துள்ளன.

எஸ்.பி.ஐ

வாராக்கடன் ரத்து என்றால் என்ன?

ஒரு கடனுக்கான அசல் அல்லது வட்டித் தொகை 90 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் இருந்தால் அது வாராக்கடனாக மாறிவிடும். வங்கிகள் தங்களது பேலன்ஸ் ஷீட்டில் வாராக்கடன்களை நீக்குவதற்காக அவற்றை ரத்து செய்துவைக்கின்றன.

ஆனால், அந்த கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் தொடர்ந்து மேற்கொள்ளும். எனினும், இதுவரை திரும்ப வசூலிக்கப்பட்ட வாராக் கடன்களின் அளவும் குறைவாகவே இருக்கிறது.

money

வாராக்கடன்களில் வசூலிக்கப்பட்ட தொகை:

2017-18 : 12,881 கோடி ரூபாய்

2018-19 : 25,501 கோடி ரூபாய்

2019-20 : 30,016 கோடி ரூபாய்

2020-21 : 30,104 கோடி ரூபாய்

2021-22 : 33,534 கோடி ரூபாய்

2022-23 : 45,548 கோடி ரூபாய்

சிறு கடன்கள் முதல் மிகப் பெரிய கடன்கள் வரை பல வகையான வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், கடனாளிகள் குறித்த விவரத்தை வங்கிகள் இதுவரை வெளியிட்டதே இல்லை.

from Tamilnadu News https://ift.tt/g7hJEOQ