முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் ஆந்திராவில், அஹ்மதியா சமூகத்தினரை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று, ஆந்திரப் பிரதேச வக்ஃப் வாரியம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. அதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா-இ-ஹிந்த், அஹ்மதியா சமூகத்தின் மீதான வக்ஃப் வாரியத்தின் நிலைப்பாடே, முஸ்லிம்களின் ஒருமித்த நிலைப்பாடு என ஆதரவு தெரிவித்தது.

இந்த நிலையில், `இந்தியாவில் ஒரு மதத்திலிருந்து ஒரு நபரையோ அல்லது சமூகத்தையோ வெளியேற்ற எந்தவொரு வக்ஃப் வாரியத்துக்கும் அதிகாரம் இல்லை’ என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்மிருதி இரானி, அனைத்து வக்ஃப் வாரியங்களும் நாடாளுமன்றச் சட்டத்தின்கீழ் வரும். எந்த வக்ஃப் வாரியமும் நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கு எதிராகச் செயல்பட முடியாது. அது இயற்றிய சட்டங்களை மீறவும் முடியாது. ஃபத்வாவை அரசு உத்தரவாக மாற்ற எந்த வக்ஃப் வாரியத்துக்கம் அனுமதி இல்லை.

எனவே, நாடாளுமன்றச் சட்டத்தின்படி இந்தியாவில் ஒரு நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ மதத்திலிருந்து வெளியேற்ற எந்த வக்ஃப் வாரியத்துக்கும் அதிகாரம் இல்லை. அஹ்மதியா முஸ்லிம் சமூகம், சிறுபான்மை விவகார அமைச்சகத்திடம் முறையிட்டதால், உண்மைகளை எங்கள் முன் வைக்குமாறு ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/zGoRm2y
