பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்துவருகிறது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அமைக்க வேண்டும் என பா.ஜ.க அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது. இதற்கு நேரெதிராக பா.ஜ.க அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் கூட்டணி அமைத்து அதற்கு I.N.D.I.A எனப் பெயரிட்டு களத்தில் இறங்கியிருக்கிறது.

பா.ஜ.க எம்.பி நரேஷ் பன்சால்

இந்தக் கூட்டணிக் கட்சியின் பெயர் அறிவித்ததிலிருந்து பா.ஜ.க-வின் தலைவர்கள், எதிர்கட்சிகளை கடுமையாக சாடி வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி அவர் கலந்துக்கொள்ளும் பெரும்பாலான கூட்டங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி., நரேஷ் பன்சால், இந்தியா என்றப் பெயரை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் எனப் பேசியது பேசுபொருளாகியிருக்கிறது.

இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில், “இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்டது. அந்தப் பெயர் அடிமைத்தனத்தின் அடையாளம். எனவே அரசியலமைப்பிலிருந்து இந்தியா என்ற வார்த்தையை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா

அதைத் தொடர்ந்து, அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக, மூத்த பா.ஜ.க தலைவரும், அஸ்ஸாம் முதலமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, “2024 மக்களவைத் தேர்தல் பாரதத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல்” எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.

from Tamilnadu News https://ift.tt/u6SPlGt