ஹைதராபாத்தை சேர்ந்த சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி என்ற பெண், முதுகலைப் படிபதற்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் சிகோகாவில் பட்டினியின் விளிம்பில் , அங்குள்ள ஒரு தெருவில் மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். தெலங்கானாவை தளமாகக் கொண்ட மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (MBT) கட்சியின் செய்தித்தொடர்பாளர் அம்ஜத் உல்லா கான் மூலம், சையதாவின் நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அம்ஜத் கான், தெருவில் சில உடைமைகளுடன் சையதா அமர்ந்திருக்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். முதலில் அந்தப் பெண்ணுக்கு அவரது பெயர்கூட நினைவில் இல்லை, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நிலையை அறிந்துகொண்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கான் தெரிவித்துள்ளார். ஆனால் பரிசோதனைக்காக அவரது உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சையதாவின் தாய், வஹாஜ் பாத்திமா தன் மகளை இந்தியாவுக்கு அழைத்துவர உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவிகேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், `தெலங்கானாவில் உள்ள மவுலா அலியில் வசிக்கும் என் மகள் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி ஆகஸ்ட் 2021-ம் ஆண்டு டெட்ராயிட் உள்ள TRINE பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் படிப்புக்காகச் சென்றார். அதன்பிறகு அவர் அடிக்கடி எங்களுடன் தொடர்பில் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் எங்களுடன் எந்தத் தொடர்பிலும் இல்லாமல் இருந்தார்.
Syeda Lulu Minhaj Zaidi from Hyd went to persue MS from TRINE University, Detroit was found in a very bad condition in Chicago, her mother appealed @DrSJaishankar to bring back her daughter.@HelplinePBSK @IndiainChicago @IndianEmbassyUS @sushilrTOI @meaMADAD pic.twitter.com/GIhJGaBA7a
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 25, 2023
என் மகள் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவரது உடைமைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டதால் அவர் சிகாகோவின் சாலைகளில் காணப்பட்டதாகவும் சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள் மூலம் எங்களுக்கு தகவல் தெரியவந்தது. பின்னர் எங்கள் மகளைத் தேட பல முயற்சிகளை மேற்கொண்டோம். இறுதியில் முகமது மின்ஹாஜ் அக்தரின் உதவியுடன் என் மகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. என் மகள் பட்டினியின் விளிம்பில் உள்ளார், எனவே அவரை உடனடியாக இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும்’ என அந்தக் கடித்தத்தில் சையதாவில் தாய் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிகாகோவில் உள்ள இந்திய தூரகம் இரண்டுக்கும் தன் மகளை மீட்டுத்தர கோரிக்கை விடுத்துள்ளார் தாய் பாத்திமா.
‘சையதா லுலு மின்ஹாஜ் பற்றி நாங்கள் இப்போதுதான் அறிந்தோம். தயவுசெய்து எங்களுடன் தொடர்பில் இருங்கள்.. நாங்கள் நிச்சம் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்’ என சிகாகோ இந்திய துணை தூதரகம், தாய் பாத்திமாவுக்கு பதில் அனுப்பியுள்ளது. தற்போது சையதாவை இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
from Tamilnadu News https://ift.tt/SzkmR9B
