மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவுக்கு (Saamana) சிறப்பு பேட்டியளித்திருக்கிறார். அவரை சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் பேட்டி எடுத்தார். அந்த பேட்டியின் முதல் பகுதி ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில், இரண்டாவது பகுதி தற்போது வெளியாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு தாங்கள்தான் காரணம் என்று பா.ஜ.க எப்படி சொல்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பொறுப்பு ஏற்காத பா.ஜ.க.வால் எப்படி ராமர் கோயில் கட்டப்படுவதற்கு பொறுப்பு ஏற்க முடியும். ராமர் கோயில் பிரச்னையை சுப்ரீம் கோர்ட் தீர்த்து வைத்தது. என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்டவேண்டுமானால் அதையும் செய்யுங்கள். அதையும் பார்க்கலாம். எனக்கு எனது தந்தை மற்றும் மக்களின் ஆசீர்வாதம் இருக்கிறது.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை எனது தந்தைதான் காப்பாற்றினார். 2002-ம் ஆண்டு நரேந்திர மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முயற்சி நடந்தது. ஆனால் எனது தந்தை தலையிட்டுத்தான் நரேந்திர மோடியின் முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொடுத்தார்” என்று தெரிவித்தார். முன்னதாக அளித்திருந்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமலாக்கப்பிரிவு, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ஆகியவைதான் மிகப்பெரிய கட்சிகள் என்றும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் நேரில் செல்லவில்லை என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
from Tamilnadu News https://ift.tt/5RAqMfz
