தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ராமேஸ்வரம் வருகை தந்தார். இதையடுத்து ராமேஸ்வரத்தில் தங்கிய அவர் இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஆடி திருக்கல்யாணம் முடிந்து, ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் இருவரும் கெந்தமான பர்வதம் நோக்கி எழுந்தருள்வதால் இன்று பகல் முழுவதும் கோயில் நடை சாத்தப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்து விட வேண்டும் என்பதற்காக வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கான கோயிலின் உள்ளேயும், வெளியேயும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் அமித் ஷா வருகை காரணமாக பக்தர்களை கோயிலுக்குள் நுழையவிடாமல் பேரிகார்டுகளை வைத்து தடுத்து நிறுத்திவிட்டனர். அமித் ஷா சாமி தரிசனம் செய்து புறப்பட்ட உடனேயே கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். இன்று சாமி தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்ப இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து விட வேண்டும் என்பதற்காக இன்னும் ஒரு நாள் கூடுதலாக இங்கேயே தங்கி சாமி தரிசனம் செய்ய கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்கிறார்கள்.
from Tamilnadu News https://ift.tt/SBAWP5u
