நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க தனது கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அதில், முக்கிய பல நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, கட்சியின் 13 துணைத் தலைவர்கள் மற்றும் ஒன்பது பொதுச் செயலாளர்கள் கொண்ட புதிய பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

சி.டி ரவி, திலீப் கோஷ், ராதா மோகன் அகர்வால், திலீப் சேத்தியா, ஹரிஷ் திவேதி, சுனில் தியோதர், வினோத் சோங்கர் போன்ற பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், குஜராத்தில் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த அனில் ஆண்டனி, கடந்த ஏப்ரல் மாதம் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவருக்கும், தெலங்கானா பா.ஜ.க முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் குமாருக்கும் தேசியச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தின் மக்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங், பா.ஜ.க-வின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாரிக் மன்சூர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த தலைவர் சி.டி. ரவி மற்றும் அஸ்ஸாம் பா.ஜ.க தலைவர் எம்.பி திலீப் சைகியா ஆகியோரின் பதவி பறிப்புக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
from Tamilnadu News https://ift.tt/VGacUij
