பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி சென்ற ஆண்டு கவிழ்ந்ததற்குப் பிறகு, கடுமையான பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது, பாதுகாப்பு குறித்த பதற்ற சூழ்நிலைகளும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கடத்த சில மாதங்களுக்கு முன்பு கூட, அரசியல் பேரணியொன்றில் இம்ரான் கானை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக இம்ரான் கானின் உயிருக்கு ஏதுவும் ஏற்படவில்லை. அதேபோல், அண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் சென்ற ஆண்டு தாலிபன்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த நாள் முதல், பாகிஸ்தானுக்கும், ஆஃப்கானிஸ்தானுக்குமான எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் – பாகிஸ்தான்

இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் (JUI-F) கட்சி நடத்திய பொதுக்கூட்டமொன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவமானது, ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் வடமேற்கில் பஜூர் மாவட்டத்திலுள்ள கைபர் புறநகர் பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 44 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் மாகாண தகவல் மந்திரி பெரோஸ் ஜமால் தெரிவித்திருக்கிறார்.

பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மிகவும் கடுமையான காயங்களுடன் இருப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் பெஷாவர் மற்றும் பிறபகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்வதற்கான வேலையில் அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாகாண போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அமர்ந்திருந்த மேடைக்கு அருகில் ஒருவர் வெடிகுண்டுடன் வெடித்துச் சிதறியதாகவும், முதற்கட்ட விசாரணையில் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் குழு இருக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

https://platform.twitter.com/widgets.js

அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரையில் யாரும் இந்த சம்பத்துக்கு பொறுப்பேற்பதாகக் கூறவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, குண்டுவெடிப்புக்கு கடும் கண்டதனாதியும் தெரிவித்தார். பின்னர் சம்பவம் குறித்து பேசிய கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அக்தர் ஹயாத் கந்தாபூர், “வெடி விபத்து நடந்தபோது கட்சியின் மூத்த தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் பொதுக் கூட்டத்தில் இல்லை” என்று கூறினார். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானுக்கும், ஆஃப்கானிஸ்தானுக்குமிடையே பதற்றமான சூழல் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

from Tamilnadu News https://ift.tt/69aAedS