நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வால் நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் கேள்விக்குறியாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதனால், இந்தியாவின் ஜனநாயகத்தைக் மீட்டெடுக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் கங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன.

இந்தக் கூட்டணிக்கு `இந்தியா’ எனப் பெயரிட்டிருக்கின்றனர். இதற்கிடையில், ” `இந்தியா’ எனப் பெயர் வைத்தால் மட்டும் போதாது… இந்தியாமீது அக்கறையும் இருக்க வேண்டும். ஊழல் செய்தவர்கள்தான் `இந்தியா’ என்ற பெயரில் ஒன்றுகூடியிருக்கிறார்கள்” எனப் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் எதிர்க்கட்சியினரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில்தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், தன்னுடைய மூத்த மகனும் பீகார் மாநில அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.ஜே.டி தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அம்பேத்கரின் வியூகத்தைக் கையிலெடுத்திருக்கும் `இந்தியா’ கூட்டணி, இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறும்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இத்தனை நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் காரணம் என்ன தெரியுமா… எந்த நாட்டில் பீட்ஸா, மோமோஸ்களைச் சாப்பிட்டு, சொகுசாக ஓய்வுக்கொள்ள முடியும் என்பதை அறிந்து, அந்த நாட்டில் குடியேறுவதற்காகத்தான். 2024 தேர்தலில் தோற்றதற்குப் பிறகு அவர் இந்திய நாட்டில் இருக்கமாட்டார். வெளிநாட்டுக்குச் சென்று குடியேறிவிடுவார்” எனத் தெரிவித்தார்.
from Tamilnadu News https://ift.tt/zYEbWqk
